மாற்று! » பதிவர்கள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

ஞாநி ஏன் இப்படி ஆனார்    
June 13, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

ஞாநி மேல் எனக்கு மதிப்புண்டு. அதற்குப் பல காரணங்கள்.பாதல் சார்க்காரின் நாடகத்தை மொழிபெயர்த்து 'பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான்' என்ற நாடகத்தை பரிக்‌ஷா குழுவின் மூலம் ஞாநி அரங்கேற்றினார். இதைப் படித்ததன் மூலமே இவரை முதலில் தெரிந்து கொண்டேன். தன்-சாதி மறுப்பாளர் என அறிய வந்ததும் மதிப்பு மேலும் கூடிற்று. 1990களிலிருந்து தொடர்ந்து இவரை வாசித்து வருகிறேன். இந்தியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

காதலாகி, கசிந்துருகி    
May 20, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

பழகிப் போன தடத்திலேயேபறக்க விரும்புகிறதுஉயிர்ப்பறவை சிறகடித்துவிரலுக்கு விரல்வித்தியாசப் படுகிறதுவாசற் கோலம்ஒருமையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடைசிக் கவிதை    
May 19, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்

மனதிற்குப் பிடித்த பாடல்தொலைவில் ஒலிக்கிறதுவேகமாக ஓடுகிறேன்போவதற்குள் பாடல்முடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வீடு    
May 13, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

நாய்கள் விளையாடிக்கொண்டிருந்தனவாம் இவ்வீட்டில்மாடும் கன்றும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனவாம்புறாக்கள் பறந்து கொண்டிருந்தனவாம்அணில்கள் லாந்திக் கொண்டிருக்குமாம் எந்நேரமும்உறவுகளும் நட்புகளும் பேசிச் சிரித்துகூடி மகிழ்ந்திருந்தார்களாம் இவ்வீட்டில்இப்போது கடன் காரர்களின் ஏசல்கள் கூட இல்லைஎல்லாரும் எல்லாமும் கைவிடகழிகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வளர்மதியின் குறும்படம் - Shiva : The Third Eye    
April 28, 2008, 8:35 am | தலைப்புப் பக்கம்

நண்பர் வளர்மதி சமீபத்தில் UNESCOவிற்காக சிவா : தி தேர்ட் ஐ என்ற மூன்று நிமிடங்கள் ஓடும் குறும் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்து மத தொன்மங்களில் உள்ள சிவ பார்வதி நடனத்தை முன்வைத்து இந்த நாட்டிய குறும் படத்தை இயக்கியிருக்கிறார். சிவனும் பார்வதியும் நடனமாட பார்வதி காலை தூக்கி ஆடிய கோபத்தில் அவரை எரித்து விடுகிறார். அவரது மறு பாகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி    
April 24, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

செக்ஸ் வறட்சி (அ) மீண்டும் மீண்டும்    
April 5, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

இருளாக இருந்தது. சோடியம் வேப்பர் விளக்குகள் வெளிச்சத்தை முடிந்தவரை விசிறியடித்துக் கொண்டிருந்தது. மர நிழல்களில் பதுங்கிப் பதுங்கி வருவது போல் நடந்து கொண்டிருந்தான். நடையில் லேசான தள்ளாட்டம் தெரிந்தது. உடல் இனம் புரியாத தினவெடுத்தது.சிகரெட் ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டு தீப்பெட்டி திறந்தான். விரல்கள் லேசாகக் கூட நடுங்கக் கூடாது எனப் பிரயத்தனப் பட்டதில் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

விரும்பியதும் வாய்த்ததும்    
February 1, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

பெயர்களற்ற பெருவெளியில்பயணம் செய்ய விரும்பியவன்திரிந்து கொண்டிருக்கிறான்பாலைவன மணலில் பாதம் புதையப் புதையஉலகின் ஆகப்பெரிய நாவலைஎழுதத் துவங்கியவன்பத்திரிகைகளின் தீனிக்குப் போட்டுக் கொண்டிருக்கிறான்விகடத் துணுக்குகளையும் ஒரு பக்கக் கதைகளையும்இசையின் உன்னதத்தைத் தேடிப் புறப்பட்டவனின்காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறதுஆபாச சினிமாப் பாடல்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒத்திப் போடுதல்    
January 29, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு அறையாகக்கீழே செல்லச் செல்லஇருளும் புகையும் சூழ்கிறதுநடுவில் திடீரென எரிந்தணையும்விளக்குகள்இருளை அதிகப் படுத்துகின்றனகாதலென்ற பெயரில்கடித்துக் குதறிக் கொண்டோம்வயிற்றுக்குள் இருக்கும்வைன் ஷாப்களின்போதைத் தள்ளாட்டம்இறந்தபின் வாழும் ஆசையைதினந்தோறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விமலாதித்த மாமல்லன்    
January 21, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்

மிகக் குறைவாகவே எழுதியிருந்தாலும், நிறைவான கதைகளை எழுதியவர் விமலாதித்த மாமல்லன். மாதத்திற்கு இரண்டு நாவல்கள் இறக்குபவர்களின் pulp எழுத்துகளின் மத்தியில் இவர் பெயர் தெரியாது போனதில் ஆச்சரியமில்லை.இந்தக் குறிப்புகளை ஓர் அறிமுகம் என்ற அளவில் அணுக வேண்டுகிறேன். இதன் மூலம் யாராவது விமலாதித்த மாமல்லனைத் தேடிப் படிக்க வேண்டுமென்பதே என் அவா.பெரும்பாலும் சிறு பத்திரிகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அக்காவும் நானும்    
January 19, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

'எப்படி இருப்பேதெரியுமாடா...'அக்கா ஆரம்பித்த விதமேஅலாதியாயிருந்தது‘நாந்தான் தூக்கிப்பேன்நாந்தான் தூக்கிப்பேன்னுநானும் பவானியும் சண்டை போடுவோம்...'கண்கள் விரியகடந்த காலத்தில் வசிக்க ஆரம்பித்தாள்சற்றுத் தள்ளி நின்று கொண்டஎன்னைப் பார்த்தபடி‘ஏண்டா இப்படி ஆயிட்டே...'கேள்வியை முடிக்காமலேயேநகர்ந்து போனாள்எனக்கு இரண்டிரண்டாகஎல்லாம் தெரிய(கவிதா சரண் ஃபிப்ரவரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நாய்கள்    
January 17, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

தெருவோர நாய்நரகல் தின்று ஓடும்சிறுவன் ஒருவன்துரத்துவான்கையில் கல்லிருக்கும்துணிச்சலில்இடையில்நழுவும் நிஜாரைச்சரி செய்ய நிற்பான்நாய் ஓடிவிடும்நாய்களை(அதிலும் நரகல் தின்னும்நாய்களை)ஒழிக்க வழி தெரியாமல்வீடு திரும்புவேன்அந்தச் சிறுவன் மேல்பரிதாபப் பட்டபடி(மாலைக் கதிர் டிசம்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை