மாற்று! » பதிவர்கள்

ஜோசப் பால்ராஜ்

ஆற்காட்டாருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஓடந்துறை.    
September 10, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

மின் வெட்டால் தமிழகம் மட்டுமின்றி, நாடே தத்தளிக்கும் இவ்வேளையில் ஒரு கிராமம் தன் மின் தேவைக்கு பிறரை சார்ந்திருக்காமல் சாதனை படைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உள்ள ஒரு பஞ்சாயத்துதான் ஓடந்துறை. இந்த பஞ்சாயத்துக்குட்பட்டு மொத்தம் 11 கிராமங்கள். அத்தனை ஊர்களுக்கும் குடிநீர் எந்த வித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

சத்தியராஜ் பேசுனது தப்பேயில்லை.    
August 1, 2008, 2:52 am | தலைப்புப் பக்கம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அணுசக்தி ஒப்பந்தம் - பாமரன் கேள்விகள்.    
July 20, 2008, 4:25 pm | தலைப்புப் பக்கம்

இன்று நம் மத்திய அரசின் நிலை நமக்கு நன்கு தெரிந்ததே. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமா, மத்திய அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவா? எது முக்கியம் எனும் கேள்வி எழுந்த போது தற்போதைய மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம்தான் மிக முக்கியம் என்றுகருதி இன்றைய மத்திய அரசு ஆட்சியையே இழந்தாலும் பராவாயில்லை, ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் போதும் என்ற முடிவை எடுத்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இதுதான் மீனவர்களை காக்கும் லட்சணமா?    
July 18, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்

மீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம். என்ன ஒரு அருமையான யோசனை??? எப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள்? இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல். ம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே? உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

முதல்வருக்கு ஒரு கூடை பூச்செண்டு.    
July 15, 2008, 2:34 am | தலைப்புப் பக்கம்

இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன. முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திருந்துமா தினமலர்?    
July 14, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ? சில வார்த்தைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் ஊடகம்

குப்பைக்கு போகின்றதா கலைஞரின் கடிதங்கள் ?    
July 12, 2008, 10:34 am | தலைப்புப் பக்கம்

நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.செத்தது தமிழர்கள் தானே? இவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உழவும் உழவர்களும் - 3    
July 12, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்

உழவும் உழவர்களும் - 1 உழவும் உழவர்களும் - 2 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டோம்என் பார்க்கும் நிலை.முந்தைய இரு பாகங்களையும் படித்துவிட்டு கருத்துகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்.சரி வாருங்கள், நாம் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகங்களினால் நடத்தப்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களை பார்ப்போம்.அறுவடை நேரங்களில் எல்லா ஊர்களிலும் தற்காலிகமாக நெல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கலைஞர் அய்யா இது நியாயமா?    
July 8, 2008, 2:21 am | தலைப்புப் பக்கம்

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்