மாற்று! » பதிவர்கள்

ஜி

மயிலிறகு பக்கங்கள்...    
March 18, 2009, 5:34 am | தலைப்புப் பக்கம்

கதிரவன் தொலைந்து வெகுநேரம் ஆகியிருந்தது.மலரின் இதழ்களைபோல் விரிந்திருந்த ஓர் குவளையின் நடுவே, கண்ணாடி குமிழினுள் எடிசன் மட்டுமே லேசாய் விழித்திருந்த தனிமை சூழ்ந்த அறை. ஒருபக்கச் சுவரின் கணிசமான சுற்றளவை கவர்ந்திருந்த ஜன்னல், மெலிதான காற்றோடு, நிலவின் சிறு ஒளியினையும் கடத்தி வந்திருந்தது. வெளிச்சமென்றோ, இருளென்றோ பிரித்தறிந்துவிடாத ஒளியளவே மிதமாக காணப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...    
February 11, 2009, 1:00 am | தலைப்புப் பக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜங்ஷன், மார்க்கெட், டவுண், பாளை பஸ் ஸ்டாண்ட், ஹை கிரவுண்ட் என்று நெல்லை நகர சுற்றுவட்டார ஊர்களனைத்தும் ஆங்கிலமொழியிலேயே அறியப்பட்டு வந்தன. அரசியல் ஆதிக்கமோ, மொழியார்வமோ, திடிரென ஓர் நாள் நெல்லை சந்திப்பு, தினசரி சந்தை, நெல்லை நகரம், பேருந்து நிலையம், மேட்டுத்திடலென்று பெயர் மாற்றப்பெற்று விட்டன. அவ்வதிரடி மாற்றத்தினால், பேருந்து பலகைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

விடுபட்டவைகள்...    
January 19, 2009, 2:18 am | தலைப்புப் பக்கம்

இறுக மூடிய கண்ணாடி ஜன்னல்களின் இடுக்கின் வழியே புகுந்து சில்லென்று முகத்தில் சிணுங்கும் மெல்லிய காற்றினையும் சட்டைச் செய்யாமல், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் பைங்கிளியிடம் எப்படி பட்டாசு கிளப்புவது என்று பெங்களூரில் ஆரம்பித்தாலும், நெல்லை வந்து சேரும் வரையிலும் கூட 'ஹலோ' என்ற வார்த்தை கழுத்து வரைதான் வந்திருக்கும். அப்படியொரு துவக்கத் தொல்லை எனக்கு. Starting...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சினிமா தொடர் விளையாட்டு    
October 13, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

சினிமாவைப் பத்துன தொடர் விளையாட்டாம். என்னையையும் இந்த ஆட்டைல இழுத்துவிட்ட தம்பியண்ணனுக்கு நன்றி. நேரா கேள்வி பதிலுக்கே போயிடலாம்.1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?எங்க ஊர்ல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஸ்ரீவைகுண்டத்துல ஜவஹர்னு ஒரு தியேட்டர் இருக்கு. எங்க ஊர்ல இருந்து ரெண்டு வில்லு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இருள் தடங்கள்... - 2    
October 7, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்

தடம் - 1செயற்கை ஒப்பனைகளற்ற இயற்கை அழகேந்திய தாரகைகளின் மத்தியில் அளவுகோல் கடந்த அழகான பெண்களைத் தேடி மேய்ந்து கொண்டிருந்த என் விழிகளின் மொத்தக் காட்சிகளையும் திருடி சற்றென ஒளி பரப்பி நடந்து கொண்டிருந்தாள் வெள்ளை சுடிதாரில் தேவதை வேடம் பூண்ட ஒருத்தி."அம்மா... உன் மருமவள பாக்காம அங்க என்னம்மா பண்ணிட்டு இருக்க?”, எனக்கு பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இருள் தடங்கள்... - 1    
October 6, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

நடைபயிலும் மழலையின் அழகான பருவத்தையொத்த இளங்காலை பொழுது. கறுப்பு வெள்ளை கண்ணீர் அஞ்சலி, ஸ்டாலின், ரயில்வே ஊழியர்கள் தேர்தல், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், காதலில் விழுந்தேன் என்று காகித உலகைத் தாங்கிக் கொண்டிருக்கும் எழும்பூர் ரயில் நிலையம். மரித்துக் கொண்டிருந்த இருளில் வெள்ளைப் பரப்பி உயிர்த்தெழுந்துக் கொண்டிருந்தது நடைபாதை கடையின் கடுங்காப்பி ஆவி. தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கிழிபட காத்திருக்கும் மௌனங்கள்...    
August 28, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

வெறித்த வானில், இருள் குடித்து கருத்த மேகங்கள் சூழ்ந்து, சினந்தணிக்கும் பெருமழையொன்றின் ஆதியை அடையாளமிட்டுக் கொண்டிருந்தன. பொய்த்துப் போகுமென்ற இறுமாப்பில், துவங்கி விட்டிருந்தது என் பயணம். மெல்லிய வருடலில் மேனி சிலிர்த்தக் காற்று, வாகன விசையின் வளர்வால் தன்மை சிதைந்து, சகிக்கும் நிலைதாண்டிய குளிரூட்டிக் கொண்டிருந்தது. என் எதிர்திசையில் பயணப்பட்டிருந்த பறவை தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேவதை கவிதைகள்    
August 12, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்

தேவதை = தேன் + வதை*கதிரவன் கண்விழிக்க‌கடற்கரையோரம் நீ சென்ற‌காலையில்மாநாடு கூடிவிட்டதாம்தேவதைகளின் ஊர்வலமென்று...*தங்கள் றெக்கைகளையெல்லாம்பிய்த்துக் கொள்கிறார்கள்வான தேவதைகள்...சிறகுகளற்ற உன் சிறப்பை அடைய வேண்டி...*கலாச்சாரக் காவலர்களேகண்மூடிக் கொள்ளுங்கள்...தேவதைலோகத்திலெல்லாம்அறிவித்து விட்டார்கள்...அவள் உடுத்தும் ஜீன்ஸ்‍‍ டி-சர்ட்தான்இனி தேவதைகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சமீபத்தில் பார்த்த படங்கள்...    
August 2, 2008, 5:03 pm | தலைப்புப் பக்கம்

சுப்ரமணியபுரம் படத்தின் விளம்பர புகைப்படங்களைப் பார்க்கும்போதே, இப்படத்தில் ஏதோ ஒரு காந்தத் தன்மை இருப்பது புலப்படும். எண்பதுகளில் அளவுக்கதிகமான தலைமுடி, பெரிய கிருதா, பெல் பாட்டம், இறுகிய, நீண்ட காலருடைய சட்டை என என் தந்தையின் பழைய புகைப்படங்களை நினைவுப் படுத்திச் சென்றன. தன்னுடைய முதல் படத்தை இயக்கி, நடித்தது மட்டுமல்லாமல் அதனை தயாரித்த சசிகுமாரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்    
June 16, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

லைலாவ பண்ணு இம்ப்ரஸு...    
June 27, 2007, 4:21 am | தலைப்புப் பக்கம்

டைட்டில பாத்தவுடனே டைவ் அடிச்சு ஓட நினைக்கிறவங்க, அப்படியே க்ளைமேக்ஸ்ல இருக்குற பஞ்ச் டையலாக்க பஞ்சமில்லாம படிச்சுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கோங்க. மத்தவங்க மேலப் படிங்க... ஸாரி......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை