மாற்று! » பதிவர்கள்

ச.தமிழ்ச்செல்வன்

நித்யானந்தம் என்கிற இளைஞன்    
March 3, 2010, 9:34 am | தலைப்புப் பக்கம்

சன் நியூஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய சுவாமி நித்யானந்தாவின் படுக்கையறைக்காட்சியை நானும் பார்த்தேன்.இந்துத்வா ஆசாமிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி அவசர அவசரமாக அவர் அல்ல எங்கள் அடையாளம் என்று பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்னைகளுக்குப் பொருளாதாரத் தளத்தில் அல்லது அரசியல் தளத்தில் தீர்வுகாணப் போராட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யார் சிரித்தால் தீபாவளி?    
October 6, 2009, 4:04 am | தலைப்புப் பக்கம்

அவள் பெயர் கவிதா. 18 வயதுப் பருவ மங்கை. சந்தனக்கலரில் பூப்போட்ட சுடிதாரும் துப்பட்டாவும் அணிந்து அவள் மேடையேறினாள்.மேடையில் அமர்ந்திருந்த நாங்கள் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தோம்.ஒரு நிமிடத்துக்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.இரு கரங்களையும் துப்பட்டாவுக்க்குள்ளேயிருந்து வெளியே எடுத்து வணக்கம் சொன்னாள்.அந்தக் கைகளையும் எங்களால் தொடர்ந்து பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

துப்பாக்கிகள் அடங்கியிருக்கும் இப்போதேனும்...    
June 4, 2009, 5:15 pm | தலைப்புப் பக்கம்

என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் என்ன பேசிக்கொண்டிருந்தாலும் மனதின் பின் திரையில் சத்தமில்லாத ஒரு மௌனப்படமாக இலங்கையில் தமிழ் மக்கள் கதறியழுவதும் பெண்கள் இருகரம் விரித்து வானத்தை நோக்கிக் கதறிப் பேசுவதும் லாரிகளிலிலிருந்து அன்று கொன்ற ராணுவத்தினர் இன்று நீட்டும் உணவுக்காகக் கைகள் ஏந்தி மக்கள் வெறித்து நிற்பதும் என ஒரு காட்சி சதா ஓடிக்கொண்டே இருக்கிறது.குற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் இளமையின் சிறகுகள் உதிரத்துவங்கி விட்டன.....    
June 3, 2009, 7:02 pm | தலைப்புப் பக்கம்

        கமலாதாஸ் என்றும் மாதவிக்குட்டி என்றும் மாதவிசுரய்யா என்றும் அறியப்பட்ட -- மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் /கதைகள் எழுதிய என் பிரியத்துக்குரிய மூத்த படைப்பாளி - என் இளமைக்காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக என் வாழ்வோடு இரண்டறக்கலந்திருந்த கமலாதாஸ் கடந்த 31 ஆம் தேதி புனேயில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி என்னைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது(இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை    
April 21, 2009, 2:24 pm | தலைப்புப் பக்கம்

  நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன். தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தெருமுனை    
March 12, 2009, 7:23 am | தலைப்புப் பக்கம்

  ச.தமிழ்ச்செல்வன் என்பது எனக்கு அப்பா அம்மா வைத்த பெயர் என்று சொல்லும்போதே அப்போது என் அம்மாவிடம் அப்பா கருத்துக்கேட்டிருப்பாரா என்கிற சந்தேகமும் கூடவே வருகிறது.ஆனால் என் அம்மாவும் ஒரு கலை இலக்கியவாதியான மதுரகவி பாஸ்கரதாசின் மகள் என்பதால் ஒருவேளை கலந்து பேசிக்கூட ஜனநாயகமாக முடிவெடுத்திருக்க வாய்ப்புண்டு.அம்மா இப்போது இல்லை.இலக்கிய ஈடுபாட்டின் காரணமாகவே என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: