மாற்று! » பதிவர்கள்

சுப.நற்குணன் - மலேசியா

திருவள்ளுவராண்டு 2040 தமிழ் நாள்காட்டி    
December 27, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

எதிர்வரும் தைத்திங்கள் முதலாம் நாள் (ஆங்கிலம் 14-1-2009) திருவள்ளுவராண்டு 2040 பிறக்கவுள்ளது. ஆங்கிலப் புத்தாண்டை முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழருகே உரிய தமிழ்ப் புத்தாண்டை முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. இந்தத் தமிழ் நாள்காட்டி மூன்றாவது ஆண்டாக மலேசியாவில் வெளிவருகிறது.ஏற்கனவே, 2007, 2008 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளிவந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்    
December 11, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி மொழி

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்    
November 18, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.**************செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.தடைகளைக் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்    
November 9, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

இன்று 9-11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது********************தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்    
September 21, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

மலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). "தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தமிழ்ச் செம்மொழி நாள்    
September 17, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்

இன்று 17.09.2008. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.******************************************** செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பேரறிஞர் அண்ணா    
September 15, 2008, 8:43 am | தலைப்புப் பக்கம்

இன்று 15.09.2008 பேரறிஞர் அண்ணா அவர்களின் 100ஆவது ஆண்டு நினைவுநாள். அண்ணா என்கிற அந்த மாபெரும் தமிழினத் தலைவரின் நூற்றாண்டு விழா நினைவாக இக்கட்டுரை இடம்பெறுகிறது. *****************************************************தமிழ்க்கூறும் நல்லுலகம் "அறிஞர் அண்ணா" என்று அன்பொழுக அழைக்கும், காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (சி.என்.அண்ணாதுரை) போற்றத்தக்க அரசியலாளராக இருந்த அதே வேளையில், அடிப்படையில் நல்ல தமிழ் அறிஞராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழின் சிறப்புணர்த்தும் அடைமொழிகள்    
August 16, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

1)அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 2)அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 3)அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 4)அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 5)அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 6)அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ் 7)இசைத்தமிழ்:- முத்தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்    
June 19, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்