மாற்று! » பதிவர்கள்

சின்ன அம்மிணி

உலகம் என் கையில்    
July 6, 2010, 1:52 am | தலைப்புப் பக்கம்

என் கைல ஒரு யுனிவெர்சல் ரிமோட் கண்ட்ரோல் கிடைக்குது. அதை வைச்சு முழு உலகத்தையும் இயக்க வாய்ப்பு கிடைக்குது. இப்படி சொன்னவங்க சுசி. அப்படிக்கிடைச்சா நான் என்ன பண்ணுவேன்னு சொல்லணுமாம். போன பதிவுல வேற நீங்க எல்லாம் நானும் பிரதமர் ஆகணும்னு ஆசை காட்டினீங்களா. அதோட விளைவு பாருங்க. படத்துக்கு கீழ கமெண்ட் இருக்கு . படிங்க பாக்கலாம்.எல்லா உயிர்களும் நிம்மதியா வாழ வீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மௌயியின் கடைசி சாகசம்    
December 12, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

மௌயி (Maui - The Half God) என்று அழைக்கப்பட்டதற்கேற்ப அவனிடம் சக்தியும் இருந்தது. அதே சமயம் கெட்ட குணமும் இருந்தது. தன் இரு மகன்கள் தன்னைப்போல் இல்லாமல் மந்தமாக இருக்கிறார்கள் என்பதனால் அவர்களை விடிவெள்ளி, மாலைவெள்ளி என இரு நட்சத்திரங்களாக மாற்றினான். தன் மூத்த சகோதரனை துருவ நட்சத்திரமாக மாற்றினான். தன் மனைவியின் சகோதரியின் கணவன் தன்னை விட நிறைய மீன் பிடித்தான்என்பதால் அவனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நிலமீன்    
December 11, 2008, 3:14 am | தலைப்புப் பக்கம்

மௌயி பிடித்த மீன் எதுன்னு உங்களுக்கு ஒரு க்ளூ வேண்டுமா? முதல் பகுதிலயே குடுத்தேன். மறுபடியும் இங்கே பாருங்க. சரி இப்ப கதைக்குப்போலாம்.தன் பாட்டனாரிடம் இருந்து பெற்ற அந்த அதிசயத்தூண்டிலை ஆர்வத்துடன் பார்த்தான் மௌயி. அது அழகான முத்தாலும் விலங்குகளின் முடியாலும் அலங்கரிக்கப்பட்டது மட்டுமின்றி மாயசக்தியும் கொண்டிருந்தது. சகோதரர்கள் மீன் பிடிக்கச்செல்லும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சூர்யா படம் பாக்க போலாமா    
November 16, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

வாரணம் ஆயிரம் நேத்து பாத்தாச்சு. தங்கமணிகள் எல்லாம் சூர்யா படம் பாக்க போலாம் அப்படீன்னா நிறைய ரங்கமணிகள் காதில ஏனோ புகை.ஒரு சூர்யா ரசிகை வந்திருந்தாங்க. காக்க காக்க படத்தில சூர்யா அறிமுகக்காட்சியில விசிலடிச்சு ரவுசு பண்ணனும்னு பாத்தா செத்த மாதிரி அடிபட்டு கிடக்கறதுதான் அறிமுகக்காட்சி. வாரணம் ஆயிரத்தில நல்லா விசிலடிச்சு ஆசையைத்தீத்துக்கபோறேன் அப்படீன்னாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இளமைக்காலங்கள்    
November 10, 2008, 11:29 pm | தலைப்புப் பக்கம்

மட்ட மத்தியானம் வெயில் அடிக்கும் என்றேல்லாம் நேரம் காலம் பார்க்காமல் விளையாடும் வயது. என்ன வெயில் என்றாலும் நண்பர்கள் வீட்டுக்குப்போய் விளையாடி வரும் காலம். பையங்க விளையாட்டு, பொண்ணுங்க விளையாட்டுன்னு வித்தியாசம் தெரியாத வயதும் கூட. அக்கம்பக்கத்து வாண்டுங்க எல்லாம் விளையாடுவோம். இன்னின்ன விளையாட்டுன்னு இல்ல.மச மசன்னு ஒரு விளையாட்டு. ஒருத்தர் அவுட்ன்னு அவங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நல்ல தாயார்    
May 17, 2008, 8:31 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு போறோம். என் பெண்ணுக்கும், என் தம்பி பையனுக்கும் காது குத்து விழா. குலதெய்வத்துக்கு படையல் போட்டு தான் காது குத்தணும்னு என் பெற்றோர் விருப்பத்துக்காக எல்லாரும் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு போறோம்.நான் +2 படிச்சு முடிச்சதுமே மேற்படிப்புக்காக சென்னைக்குப்போய்விட்டோம். அப்பறம் இப்பத்தான் ஊருக்கு நான் வர்றேன். எல்லாரும் படையலுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

அனுசரணை - மற்றவர்களின் தேவை    
April 26, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்

சக மனிதர்களின் இயலாமை, செயல்பாடுகளின் எல்லையைப்புரிந்து கொண்டு எந்த அளவுக்கு நாம் அனுசரணையாய் இருக்கிறோம். மலையை வளைப்பது மட்டுமே ஆற்றலாய்க்கருதுகிறோம். முடியாதவர்களை ஒரு படி குறைவாகத்தான் நினைக்கிறோம். இது சின்ன வயசில் பள்ளிப்படிப்பிலேயே ஆரம்பம் ஆகிறது. அவளைப்பார் எப்பவும் முதல் மதிப்பெண்தான். இவனைப்பார் விளையாட்டில் எப்பவும் வெற்றிதான் என்று ஒப்பீடுகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

இல்யூஷனிஸ்ட்- The Illusionist    
April 18, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

ஒரே வரியில் இப்படத்தைப்பற்றி விமரிசிக்கணும்னா என்ன சொல்லறது. முழுக்க முழுக்க விறுவிறுப்பா போற படம். பதின்ம வயதுகளில் இருக்கும் கதாநாயகன்(ஐசன்ஹோம்) ஒரு மரத்தச்சனின் மகன். ஒரு மாஜிக் செய்பவனுடன் நிகழும் சந்திப்பு அக்கலையில் அவனுக்கு ஆர்வம் தருகிறது. இவன் மேஜிக் வித்தைகளால் கவரப்பட்ட ஹங்கேரியின் இளவரசியுடன் காதல் ஏற்படுகிறது. சீனத்துக்குபோய் அரிய மேஜிக்கலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கருணை(தற்)கொலைகள்    
April 5, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

1996- ல் பிலிப் நிஷ்கி(Philip Nitschke) என்பவர் உலகின் முதல் கருணைக்கொலையை சட்டத்துக்குட்பட்டு செய்தார். Terminal Illness என்று கருதப்படும் சுகவீனங்களால் மருத்துவத்தால் கைவிடப்படும் நிலையில் இருந்தவரான பாப் டெண்ட் என்பவர் முதன்முதலாக கருணக்கொலை செய்யப்பட்டார், முழுக்க முழுக்க தன் விருப்பத்தோடே. செப்டெம்பர் 22 இறப்பதற்கான ஊசி பாப் கையில் போடப்பட்டது பிலிப் நிஷ்கி யால். அமைதியாக உயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

புகைப்படப்போட்டிக்கு    
February 2, 2008, 10:10 pm | தலைப்புப் பக்கம்

வண்ண மலர்களின் வட்டம். மொத தடவையா புகைப்பட போட்டில கலந்துக்கப்போறேன். வெலிங்டன் தாவரவியல் பூங்கால பத்து நாளுக்கு முன்னாடி எடுத்த படங்கள் இவை. அரைவட்டம். இந்த இளவட்டம்(அட நாந்தாங்க) எடுத்தது. தண்ணிக்குள்ள தெரியறது காசு. முதல் படம் வட்டத்தை மட்டும் கருத்தா எடுத்தது. இது அதோட முழுப்படம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி