மாற்று! » பதிவர்கள்

சரவணன்

பாரதி திரைப்படம் செய்திருக்கும் அநீதி!    
April 16, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

பாரதியார்,` உலகமே மாயை, எல்லாமே மாயை` என்கிற போலியான தத்துவத்தைக் கடுமையாகச் சாடிவந்தவர். இது பற்றித் தனிக் கட்டுரையே எழுதியுள்ளார். அப்படிப்பட்ட பாரதியாருக்கு பாரதி திரைப்படத்தில், நிற்பதுவே, நடப்பதுவே... பாடலில் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இந்தப் பாடலில் மூன்றாவது சரணத்தில், கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? என்ற அடிக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகள் கடவுளுக்கு எழுதியவை    
March 17, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

குழந்தைகள் கடவுளுக்கு எழுதிய கடிதங்கள். கீழேயே தமிழில் தந்துள்ளேன். மழலை மொழியைச் சிதையாமல் பெயர்ப்பது கஷ்டம் என்பதால் விரும்புபவர்கள் அசலையே படித்துக்கொள்க. இந்தக் கள்ளங்கபடமற்ற வெள்ளை உள்ளத்தை வளரும்போது இழப்பதுதான் மனித வாழ்வின் மிகப் பெரிய சோகமாகப் படுகிறது. கூடவே இந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் கடவுள் என்கிற கற்பிதத்தை நம்ப வைத்திருக்க வேண்டுமா என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

நாலே வரியில் பின்நவீனத்துவத்துக்கு மிக எளிய அறிமுகம்!    
March 16, 2008, 10:58 am | தலைப்புப் பக்கம்

பின்நவீனத்துவம் என்ற பதம் தமிழ்வலையுலகில் அடிக்கடி அடிபடுவதைக் காண்கிறேன். சிலர் இச்சொல்லைப் பார்த்ததுமே கேலி செய்வதும் உள்ளது. இந்நிலையில் பின்நவீனத்துவம் பற்றி எனக்குத் தெரிந்தவரை ஒரு எளிய அறிமுகத்தைத் தருவது சிலருக்காவது (நான் உட்பட--உங்கள் எதிர்வினைகள் மூலம்) பயனளிக்கும் எனக் கருதியதன் விளைவே இந்த இடுகை.பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, நாம் பின்நவீன உலகில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு கல்விப் புரட்சி    
March 15, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாகப் பிறர் எழுதி வெளியான விஷயங்களை என் பதிவில் மீள் பதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ரவிக்குமார் எழுதி காலச்சுவடில் வெளியான இக்கட்டுரையை இங்கு நன்றி அறிவிப்புடன் வெளியிடுவது இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதியே. மேலும் நான் கடைசியில் அளித்திருக்கும் சுட்டியில் யாரும் இலவசமாகப் படிக்கும் விதத்திலேயே மூலக் கட்டுரையும் வெளியாகியுள்ளது;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மீஷ்கா சமைத்த பொங்கல்    
March 14, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

சென்ற கோடையில் நான் அம்மாவோடு கிராமத்தில் இருந்தபோது, மீஷ்கா எங்களுடன் தங்குவதற்கு வந்தான். அவன் இல்லாமல் தனிமையில் வாடிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கும் பெருமகிழ்ச்சி.'நீ வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நல்ல துணையாக இருக்கலாம். நான் நாளை அதிகாலையில் கிளம்பி நகரத்துக்குச் செல்ல வேண்டும்; எப்போது திரும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மென் திறன்களை (soft skills) க் கேட்பது அநியாயம்!    
March 13, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

சமீப காலமாக ஊடகங்களில் வேலைவாய்ப்புப் பற்றிய செய்திகளில் அதிகம் அடிபடும் சொல் soft skills எனப்படும் மென் திறன்கள். (இதற்கும் ஆங்கில அறிவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆங்கிலத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர் கூட மென் திறன் போதாதவராகக் கருதப்பட முடியும்.)சரியான முறையில் புன்னகைப்பது, ஆங்கிலத்தில் உரையாடுவது, விளக்கவுரை (presentation) தருவது, கடிதம் வரைவது என்று ஆரம்பித்து சமயோசிதமாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி