மாற்று! » பதிவர்கள்

சந்தனமுல்லை

பப்பு - தி எக்ஸ்ப்லோரர்    
July 26, 2010, 3:54 am | தலைப்புப் பக்கம்

வழக்கமான பார்க், வண்டலூர் ஜூ அல்லது எப்போதும் போகும் வாக்கிங் பாதைகள் என்று கொஞ்சம் போரடித்தது. வானத்து வரைக்கும் வீடு கட்டி நிலாவை தொட முடியுமா, கடலுக்கு உள்ளே எவ்ளோ தூரம் போக முடியும், நீ தொலைஞ்சே போக மாட்டியா என்று பப்பு கேட்டுக்கொண்டிருந்தபோது தோன்றியது இது.ஓ, ஜாலியா தொலைந்து போகலாமே?!! தாயக்கட்டை காட்டும் திசையில் நடந்து சென்று எங்காவது தொலைந்து வந்தால் என்ன?DiceWalk!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாலூட்டி வளர்த்த parrot!!    
July 14, 2010, 4:22 am | தலைப்புப் பக்கம்

(பப்பு @ எறும்பு அரண்மனையை பார்க்கும்போது)வர்ஷினி பப்புவை வீட்டுக்கு வரச் சொன்னாள் என்று தினமும் சாயங்காலத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்தாள், கடந்த வாரம் முழுதும் . 'வீக் எண்டில் போகலாம் பப்பு' என்றாலும் கேட்பதில்லை. 'நான் வழி கேட்டுட்டு வந்திருக்கேன், போலாம் வா - ஃப்ர்ஸ்ட் லெஃப்ட் அப்புறம் ரைட் அப்புறம் ஸ்ட்ரெய்ட்' என்று ஒரே தொணப்பல். ”நீ வர்ஷினியை வீட்டுக்கு கூப்பிடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நாங்களும் மீன்களும்!    
July 7, 2010, 3:22 am | தலைப்புப் பக்கம்

கடந்தவாரத்தில் சில புதிய கதைப்புத்தகங்களை வாசித்தோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். என் பர்த்டே வர்றதுக்கு இன்னும் எவ்ளோ டேஸ்ப்பா இருக்கு என்று பப்பு கேட்டதும் தான் உறைத்தது இன்னும் ஒரு சில மாதங்களில் பப்பு ஐந்து வயது சிறுமி என! தான் வளர்க்கும் தங்க மீன்களுடன் தானும் ஒரு மீனாக மாறி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!    
May 5, 2010, 3:46 am | தலைப்புப் பக்கம்

அனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.உறவினர்...தொடர்ந்து படிக்கவும் »

ஆந்திரா - தெலுங்கானா, வரலாற்றுத் தொடர்புகள் 1949 - 56    
April 19, 2010, 5:45 am | தலைப்புப் பக்கம்

"உன்னதம்" இதழுக்காக, 'எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி' பிப்ரவரி 20 இதழிலிருந்து தமிழாக்கம் செய்த தெலுங்கானா பற்றிய கட்டுரையை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.பகுதி - 1பகுதி - 2பகுதி - 3****************6. முடிவுரை காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தாலும், வட்டாரத் தளங்களில், குறிப்பாக கடலோர மாவட்டங்களிலுள்ள ஆற்றலும், செல்வாக்கும் மிகுந்த கம்மா சமூகத்தினரின் வளர்ச்சியிலும், தெலுங்கானா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


பப்பு டைம்ஸ்    
February 25, 2010, 4:11 am | தலைப்புப் பக்கம்

(வீட்டுக்கருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்றபின் ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம்.)ஆச்சி, என்னை இங்கேயே விட்டுடு, நானே நடந்து வீட்டுக்கு வந்துடுவேன், தனியா.ரோட்-லாம் க்ராஸ் பண்ணனும். நீ பெரிய பொண்ணானதும் தனியா போலாம். இப்போ அம்மாக்கூடத்தான் போணும்.நீ தூங்கும்போது நான் தனியா போலாமா?சொல்லிட்டுதான் போணும். தூங்கிட்டு இருந்தாலும் எங்கே போறேன்னு சொல்லிட்டு போணும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐ ஃபார் ...    
February 21, 2010, 2:53 am | தலைப்புப் பக்கம்

...ஐடிகார்ட்!ஸ்கூல்லே காலேஜ்லே கொடுப்பார்களே - லாமினேட் பண்ணின ஐடிகார்டு. அது இல்லீங்க...இது வேற! பட்டையா இல்லேன்னா உருண்டையாக பஞ்சு மாதிரி கயிறுலே கம்பெனி பேரு எழுதி கழுத்திலே போட்டிருப்பாங்களே..அந்த ஐடி கார்ட்!கொஞ்சம் பட்டையான கயிறு, அதில் எழுத்துகள் அழிஞ்ச மாதிரி எழுதி இருந்தா - டிசிஎஸ். உருட்டிய கயிறாக இருந்தால் அது சிடிஎஸ். கொஞ்சம் பெரிய பட்டையாக இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாலையோரம்.....    
January 19, 2010, 1:57 pm | தலைப்புப் பக்கம்

இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும். மடிப்பாக்கத்திலிருந்து கிண்டி செல்வதற்கு பிருந்தாவன் நகர் வழியாக வந்துக்கொண்டிருந்தேன். குறுக்குவழிதான். கொஸ்டின் பேங்க்-கை படித்து முன்னேறிய தலைமுறையாச்சே! மேலும் சிக்னல்கள் எதுவும் இருக்காது..வாகன நெரிசலும் குறைவுதான். ரோடிலேயே ஒரு கோயில் வரும். அங்கு மட்டும் கொஞ்சம் நெரிசலாக இருக்கும். உருட்டிக்கொண்டு செல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அய்யனாரின் 'உரையாடலினி'    
January 7, 2010, 11:49 am | தலைப்புப் பக்கம்

ஒரு சிலர் நண்பர்களாவதற்கு எந்த முகாந்திரமும் வேண்டியிருக்காது. சாதாரணமாக பேச்சு ஆரம்பிக்கும், ஆனால் கொஞ்ச நாட்களுக்குள் நமது முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்திருப்பார்கள். கோகிலாவுடனான நட்பும் அப்படித்தான். ஹாஸ்டலில் காஃபி எடுக்க வரும்போதோ அல்லது நோட்ஸ் கொடுக்கல் வாங்கலிலோதான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஒரு சின்ன ஹாய்....போதும்!சிஸ்டருக்கு டிமிக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Weekends Vs Weekdays    
December 6, 2009, 5:13 pm | தலைப்புப் பக்கம்

மற்றவர்களுக்கு நாம் தேவைப்படுகிறோம், இன்றியமையாதவர்களாக இருக்கிறோம் என்ற உணர்வு, வாழ்க்கையில் அங்கீகாரத்தை, பெருமிதத்தைத் தருகிறதுதான். அந்த அங்கீகாரமும், திருப்தியும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தருகிறதுதான்! ஆனால், இரவு மூன்று மணிக்கு, படுக்கைக்கு அடியில் தவளையை தேடிக்கொண்டிருந்தபோது, எனக்கு இது எதுவுமே தோன்றவில்லை! “ஆச்சி, தவளை என்னை இழுத்துட்டு போகுது”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நின்னுக்கிட்டே ஃபேனை தொடுவது பற்றி...    
December 5, 2009, 2:55 pm | தலைப்புப் பக்கம்

பப்புவை பார்ப்பவர்கள், அடுத்து என்னைப்பார்த்து முதலில் கேட்கும் கேள்வி "என்ன, இவ்ளோ ஒல்லியா இருக்காளே!". அதுவும் என்னை பார்த்துவிட்டு, பப்புவை பார்த்தால் அப்படித் தோன்றுவது நியாயம்தான் என்றாலும் , நான் அவளுக்கு சாப்பாடு போடுகிறானெவென்றே ஒரு சிலருக்கு சந்தேகம் வருவது கொஞ்சம் ஓவர்தான்.அப்படி சொல்பவர்கள் கையில் உடனே ஒரு கிண்ணத்தில் சாதத்தை போட்டு பப்புவுக்கு ஊட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜங்கிள் ஜங்கிள்...    
October 16, 2009, 4:34 am | தலைப்புப் பக்கம்

‘இன்னைக்கு ஆக்டோபர் 28தா' என்பதுதான், கடந்த இரண்டு மாதங்களாக காலையில் எழுந்ததும் எங்கள் காதுகளில் விழும் முதல்வாக்கியம். இம்முறை, 28ஆன் தேதி வாரநாட்களில் வருவதால் பிறந்தநாளைக் கொண்டாடுவது கொஞ்சம் சிரமம் என்று தோன்றியது. மேலும், அலுவலக நண்பர்களின் குழந்தைகளை பப்பு அறிந்திருக்கிறாளே தவிர அவர்களுடன் நேரம் செலவழித்ததில்லை. விளையாடியதில்லை. இதையெல்லாம் மனதில் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு டைம்ஸ்!!    
October 7, 2009, 3:00 am | தலைப்புப் பக்கம்

பப்பு எதற்கோ கோபமாக இருந்தாள். கோபமாக இருந்தால் முகத்தை கைகளால் மறைத்துக்கொள்வது வழக்கம். நானும் அவளை சமாதானப்படுத்த முயன்றேன். “என்னை ஏன் டிஸ்டர்ப் பண்றே?” - பப்பு”சரி, சாரி, டிஸ்டர்ப் பண்ணல” என்று சொல்லிவிட்டு துணிகளை மடித்துக்கொண்டிருந்தேன். ”என்னைப் பார்த்து சிரிக்கறதுக்கு கூப்பிட்டியா” என்று சிரித்தாள். கோபம் அழகாக மாறிக்கொண்டிருந்தது!! ஆங்கிலத்தில் பேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரவுண்ட் அப்!    
September 30, 2009, 2:35 am | தலைப்புப் பக்கம்

(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்!)பப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூரத்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் - ஆம்பூர் பயணம் - மருந்துகள் - இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Very Hungry Caterpillar    
August 3, 2009, 2:05 am | தலைப்புப் பக்கம்

நானும் பப்புவும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தோம். The Very Hungry Caterpillar. ஒரு ஞாயி்றுக்கிழமையின் காலையில் முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு கூட்டுப்புழு அடுத்த ஞாயிறுக்குள் கூட்டுக்குள் அடையும்வரை பயணிக்கும் கதை. மிகுந்த பசி கொண்ட கூட்டுப்புழு , முதல் நாள் ஒரு ஆப்பிள், இரண்டாம் நாள் இரண்டு பேரிக்காய்கள், மூன்றாம்நாள் மூன்று பிள்ம்கள் என்று ஒரு வாரம் முழுக்க உணவுண்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!    
July 28, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

...Evil Mamma!!    
July 23, 2009, 6:37 am | தலைப்புப் பக்கம்

பெட் மேலே குதிக்காதே பப்பு, அப்புறம் கொம்பு முளைக்கும்!ஒரு பேர்டீ(birdie) வந்து சொல்லுச்சு...பப்பு பாலை குடிச்சு முடிச்சாதான் சுட்டி டீவிலே டோரா வருமாம்!வாயை திறக்காம, இப்படி அமைதியா இருந்தாத்தான் மருதாணி கையிலே ஒட்டும்!நைட் பன்னெண்டு மணியாச்சுல்லே...நாய்ங்களுக்கு றெக்கை முளைச்சு பறந்து பறந்து மாடிக்கு வரும்....காலையிலே போய்டும், அப்போ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கலர்...கலர்..விச் கலர் டூ யூ வாண்ட்?!    
July 20, 2009, 8:09 am | தலைப்புப் பக்கம்

எனக்கு அப்போ அஞ்சு வயசாயிக்கும், ஒரு உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அவர் பேரு அண்ணாதுரை. அப்போ அவருக்கு 24-25 இருக்கலாம். 'இவரை நீ சித்தப்பான்னு கூப்பிடணும்” அப்படின்னு சொன்னாங்க, ஆயா. நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி. ”சின்னபொண்ணுக்கு கூட தெரியுது, உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

குட் டச்/பேட் டச் - கருத்துரையாடல்!    
May 11, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்

1.private part-public part எது private part/public part என்று தெரியப்படுத்தவேண்டும். எதையெல்லாம் பொது இடத்தில் நாம் தொட முடியுமோ அது paublic part, எவையெல்லாம் தொடமுடியாதவையோ அது private part. சில சமயங்களில், அம்மாவோ அல்லது சீனியர் அம்மாவான ஆயாவோ அவர்கள் மட்டுமே தொட அனுமதி உண்டு. ஒரு சில சமயங்களில் மருத்துவர் மட்டுமே!2. கண்,காது, மூக்கு என்று உடலின் பாகங்களை கற்றுக்கொண்டு சொல்ல முற்படும்போதே, vagina,pennis என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

Jungle Book    
April 12, 2009, 10:14 am | தலைப்புப் பக்கம்

(Thanks - Image : google)அண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது! யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை!கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பப்பு டைம்ஸ்!    
March 19, 2009, 9:56 am | தலைப்புப் பக்கம்

Rantஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க! என்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!தலைக்கனம்!?!பப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சிநேகம்    
March 7, 2009, 3:32 am | தலைப்புப் பக்கம்

என் உயிர்ப்பறவைஉந்தன் நிழல் தேடிப் போகும்ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்டமுட்டைகளாய்நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!எங்கோ தூரத்தில் கேட்டமணியோசையாய்...தொலைவில் பெய்தமழையால்மூக்கை நெருடும் மண்வாசனையாய்மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...உன்னைச் சந்திக்கும் காலம்வருவதற்குள்என் உயிர்ப்பறவைமுந்திக் கொண்ட காலனின்அம்பினுள்!(உபயம் :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாலினி கொடுத்தப் பரிசு!!    
February 18, 2009, 4:44 am | தலைப்புப் பக்கம்

மாலினி நேற்றுதான் தனது எட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடினாள்.அவளது நண்பர்களும், உறவினர்களும் அவளது பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்துத் தெரிவித்ததுடன் பரிசுகளும் அவளுக்குக் கொடுத்தனர்.பரிசுகள் என்றால் மாலினிக்கு மிகவும் பிரியம். பரிசுப் பொருள் சுற்றியுள்ள காகிதத்தைப் பிரிக்கும்போதே அவள் கண்கள் ஆவலுடன் விரியும். இப்போதெல்லாம் அவளாகவே காகிதத்தை அழகாகப் பிரிக்கக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு டைம்ஸ்!!    
February 17, 2009, 3:17 am | தலைப்புப் பக்கம்

பள்ளிக்கு கொண்டு செல்லும் தண்ணீர் குடுவையையே (பாட்டில்) வீட்டிலும் உபயோகிக்கஅ ஆசைப்படுவாள் பப்பு சிலநேரங்களில். அந்த குடுவையோடுதான் பார்த்தேன் அவளைக் கடந்துச் சென்றபோது! ஆனால், விரலால் எதையோ எடுத்து உள்ளே போட்டுக் கொண்டிருந்தாள்!ஆமாம், எதையோ டீப்பாயிலிருந்து எடுத்து குடுவையில் போட்டாள்..இப்பொழுதுதானே சிப்ஸ் கொடுத்தேன், அதை பிய்த்து தண்ணீரில் போடுகிறாளோ??அவளையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)    
February 1, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

சோட்டா ரீசார்ஜ்    
January 7, 2009, 3:12 am | தலைப்புப் பக்கம்

பப்புவை வேனில் அனுப்ப காத்துக்கொண்டிருந்தோம், வேன் வருமிடத்தில். எங்கள் தெருவில் மாடுகள் எப்போதும் நடைபழகிக்கொண்டிருக்கும். நாங்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு மாடு வந்துக்கொண்டிருந்தது, ஒரு ஐந்தடி தூரத்தில். உடனே பப்பு, ”என்னைத் தூக்கு தூக்கு” என்று சொல்லத் துவங்கினாள். ”ஒன்னும் பண்ணாது பப்பு, அது போய்டும்”என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒளியும் ஒலியும்    
January 6, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்

பப்புவுக்குத் தெரியாமல் எடுத்தது இந்த வீடியோ! கடைசியில் கண்டுகொண்டவள், "கோ" என்று கோபத்துடன் விரட்டியதும் ஓடிவந்துவிட்டேன்!( பின்னனியில் கேட்பது வீடு சுத்தம் செய்யும் சத்தம், கண்டுக்கொள்ளாதீர்கள்!) "i am tiny seed sleeping" என்ற ரைமுக்கு அவளது பொம்மை நண்பர்களை ஆக்ஷன் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறாள்!இது ஜனகன மன, பப்புவின் தற்போதைய பேவரைட்டில் முதல் மூன்று இடத்துக்குள்ளா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு 2009    
January 4, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

புது வருடம் பற்றியொன்றும் பெரிதாக புரிதலில்லையென்றாலும், பப்புவிற்கு அது ஏதோ ஒரு சிறப்பான நாள் என்று மட்டும் தெரிந்திருந்தது. “ஹேப்பி நியூ யர்” என்றும் “ஹேப்பி பர்த்டே டூ யூ” என்றும் அவளை வாழ்த்தியவர்களுக்கெல்லாம் திருப்பி வாழ்த்திக் கொண்டிருந்தாள். தீபாவளிதான் அவளுக்கு தெரிந்த, நன்கு புரிந்த பண்டிகை, ”ஹேப்பி பர்த் டே”வுக்குப் பிறகு. முழுதாக படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

How are you today, sir?    
January 2, 2009, 2:45 am | தலைப்புப் பக்கம்

இந்த வீடியோ எடுத்து 2 மாதங்கள் ஆகிறது! பப்பு ரைம்ஸ் பாடுவது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டாலும், இதை புதிதாகக் கற்றுக்கொண்டு பாடியபோது கண்கள் அகலஎக்சைட்டடாக பார்த்துக் கொண்டிருந்தேன்! முதலில் பம்கின் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..பின்னர் thumpkin என்றுத் தெரிந்தது, கூகுளில் தேடியபோது..(கூகுளில் தேடியதற்கு பதில் அவளது பள்ளி புத்தகத்தில் தேடியிருந்தால் உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

12 விஷயங்கள் - பப்புவை பற்றி!    
December 23, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

1. சந்தனச்சாலையில்சின்ன சீதாப் போனாளே - என்று புத்தகத்திலிருந்த் வாசித்துக் காட்டினேன். சிலதினங்கள் கழித்துஎன்னிடம் வந்து அந்த ட்யூனிலேயே பாடுகிறாள், ஆச்சி போனாளேசந்தனமுல்லை வந்தாளே2. நொண்டி அடிக்கிறாள். 2 அல்லது மூன்று ஸ்டெப்-கள் தான். ஆனால், பேலன்ஸ் செய்வதைப் பார்க்க அவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாயிருக்கிறது..3. தான் கற்ற/கேட்ட கதைகளின் பாத்திரங்கள், நிகழ்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நானும் மனிதர்களும்    
December 22, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

(உபயம் : பள்ளிக்காலத்து கதை நோட்டு)மு.கு: இது அனுபவமில்லை, கற்பனையென்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? (ஒரு சில வாக்கியங்கள் எனது மற்றும் என் கிளாஸ் தோழிகளின் அனுபவங்கள். )நான் மாடியில் இயற்கையின் மடியில் போதையுற்று இருந்தேன். நான இலைகளின் இனிய கீதத்தில் மயங்கியிருந்தேன். கீழே, காற்றில் ஓடும் சருகுகளின் சப்தத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். மேகப்பட்டாடையை கிழித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காலையில் தினமும் கண்விழித்தால்...    
December 18, 2008, 3:57 am | தலைப்புப் பக்கம்

காலைநேரங்கள் பரபரப்பானவை. ”படுக்கையை விட்டு எழு, பப்பு பள்ளி செல்லவேண்டும்” என்பதுதான் என் மூளை எனக்குக் கொடுக்கும் முதல் கட்டளையாயிருக்கும். அதுவும் 7லிருந்து 8 மணிவரை ஒரு நிமிடம் கூட வீணாக்கக் கூடாது. பப்புவின் மனமும் கோணாதவாறு! 7 மணிக்கு எழுப்பி துப்புரவாகி பால் குடிக்கச் செய்து 8.05-க்கு வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் நாங்கள். அதிலும் எல்லாம் விளையாட்டாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கனாக் கண்ட காலங்கள்!!!    
December 17, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

கனவுகள் பற்றி ஒரு பதிவு படித்தேன், தேவன்மயத்தின் வலைப்பூவில்! எனக்கும் கனவுகளைப் பற்றி சொல்ல ஆசை வந்துவிட்டது! கனவுகள் வருவது சாதாரணம்தான்..ஆனால் அதன்கூட நாம் செய்யும் காமெடிதான் மேட்டரே!!நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பேன்..(ஆமா, தூங்கினாதானே கனவு வரும்!!). ஏதோ ஒரு கனவு. கனவிலேயே எனக்கு கால் வலி. வலியென்றால் நிஜமான வலி! உடனே விழிப்பு வந்து, பார்த்தால் நானே காலை சுவரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீங்கள் மடிப்பாக்கம் வழிச் செல்பவராயின், ஒரு வேண்டுகோள்...    
December 16, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

மடிப்பாக்கத்தின் பாலையா கார்டன் பேருந்து நிறுத்தத்திற்கு அப்பால் மெயின் ரோடை ஒட்டி ஏரி முடிவடையும். சமீபகாலமாக, கடந்த பெருமழைக்குப் பின், மிக மோசமான் துர்நாற்றம் வீசுகிறது. குடலை பிடுங்கும் துர்நாற்றம் என்றால் அதுதான்! அந்த ஏரியின் கரை சிறிது மேடாக இருக்கும். உண்மையில் அந்த இடம், மண்பகுதியாக இருந்தது, இந்த மழையில் நீர் நிரம்பி, மட்காத கழிவுப் பொருட்கள் சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்!!    
December 12, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

(படத்தில் தெரியும் அந்தச் சின்னஞ்சிறு கைகள் செயதன, இந்த வட்டத்தை!)பப்புவுக்கு இப்போது எல்லாமே ஷேப்ஸ்தான்! வட்டங்கள், முக்கோணங்கள் மற்றும் சதுரங்கள் ஆளுகின்றன அவளது கற்பனையை! முக்கோணம் செய்து எங்களைக் கூப்பிட்டு காட்டியவள், காமெரா எடுத்து வருவதற்குள் கலைத்து வட்டமாக்கி விட்டாள்! எழுதும் போதும் எழுத்துக்களால் ஒரு கட்டத்தை அமைக்கிறாள். இப்போது உணவில் விளையாடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு சோனி வாக்மேனும் சில சென்டிமென்ட்-களும்    
December 8, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

ஸ்கூல் படிக்கும்போது எங்களிடம் ஒரு வாக்மேன் இருந்தது. எங்களிடம் என்றால் எனக்கும், என் தம்பிக்கும் சேர்த்து!வீடீயோகான் என்று நினைக்கிறேன். அதை எந்தளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்தளவுக்கு தேய்த்தாயிற்று. காலேஜ்-க்கு ஹாஸ்டலுக்கு போகும்போது கண்டிப்பாக அதை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், நான் வாங்கியிருந்த கேஸ்ட்-டுகளை எடுத்து பெட்டியில் போட்டுக் கொண்டேன். (என்ன ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குத்துவிளக்காக குலவிளக்காக!!!    
December 6, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

அமித்து அம்மா ஆரம்பிச்சு, வித்யா தொடர்ந்து அப்புறம் என்னையும் இழுத்து விட்டுட்டாங்க இதுல. ஓக்கே என்னோட கொசுவத்தி இல்லை அனுபவங்கள் எப்படியாவது எடுத்துக்கோங்க! உண்மையில் ஒரு பதிவு எழுதத்தான் நினைத்திருந்தேன் வழக்கம்போல பப்புவை பற்றி! வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன், அப்படின்னு! ஏன்னா, ரிலீஜயனை விட ஸ்பிரிச்சுவலா இருக்கறதுதான் முக்கியம்ன்றது என்னோடக் கருத்து! அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருந்திய மனம்    
December 5, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்

பள்ளி படிக்கும் வயதில், கதைகளும் ஜோக் என்ற பெயரில் ஒரு சில அறுவைகளும் எழுதியிருக்கிறேன், கவிதைகளோடுகூட! அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே எனது கஸின்ஸின் பெயர்கள்! நல்லவேளை, அப்போ அவங்கள்ளாம் இதை படிச்சிருந்தா என்னை பின்னியெடுத்திருப்பாங்க!! ஓக்கே..ஒன்னொன்னா ரிலீஸ் பண்றேன்..இது எழுதினப்போ நான் 11வது படிச்சிக்கிட்டிருந்தேன்னு என்னோட நோட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரைம் டைம்    
December 2, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து வாயை சிரிப்பது போல் காட்டுவதைப் பார்த்து யோசிக்கிறீர்களா? அந்த அனிமேடட் பாடலில் வரும் பொம்மை பாப்பா சொல்லிவிட்டு அப்படி புன்னகைக்கும். அதுதான் இது!! ( . - இ-திருஷ்டிப் பொட்டு) ;-)”ஆயாம்மா டைனி ” என்று பப்பு பாடும் பாடலைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அது கொஞ்சம் முன்னேறி இதோ இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில அம்மாக் கணங்கள்!!    
November 24, 2008, 2:05 pm | தலைப்புப் பக்கம்

”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்” - பப்பு என்னிடம் சொன்னபோது சிரிப்பு வந்தது. அதை விட அவளின் செய்கை..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்! ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்! “பப்புவுக்கு ஆச்சி பிடிக்கும், ஆச்சிக்கு பப்பு பிடிக்கும்!”-இதுவும் பப்புவால் அடிக்கடி சொல்லப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Phase D    
November 24, 2008, 1:41 am | தலைப்புப் பக்கம்

...has hit us now!! பப்புவின் வளர்ச்சிகளை மகிழ்ச்சியோடு பதிவதுபோலவே இதையும் பதிகிறேன்! பப்பு ஒரு புதிய சொல்லாடலை கற்றுக் கொண்டிருக்கிறாள்! அது ஒரு தவறான பிரயோகம் என்பது தெரிந்திருக்கிறது!! எந்த நேரத்தில் (அவளுக்கு பிடிக்காததை நாம் செய்யும்போது, கோபப்படும் போது) உபயோகிப்பது என்பதையும் அறிந்திருக்கிறாள்!!நாம் திருப்பி “என்ன சொன்னே?! “ என்றுக் கேட்டால், திரும்பச் சொல்கிறாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ம்ம்..என்ன சொல்வேன் நான்?    
November 19, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்! நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி! நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!நான் இப்போதெல்லாம் அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு சீன்ஸ்!!    
November 18, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

சீன் - 1 சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)சீன் - 2 ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இந்த சிம்டம்ஸ் உங்களிடம் இருந்தால்..    
November 15, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!!1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!3....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உன்னை நான் அறிவேன்!!    
November 12, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

பப்புவிற்கு என்ன பிடிக்கும் என்றும் அவளைப் பற்றியும் எனக்குத்தான் தெரியும் என்று சிலசமயங்களில் பெருமை/பூரிப்பு எல்லாம் வருவதுண்டு! எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன். ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது “அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஞானம் பிறந்த”தடி”!!    
November 8, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ விளையாடிக்கொண்டிருக்கும்போது, பப்புவைக் குழந்தை என்று சொன்னேன்!பப்பு கேட்டாள், ஏன் என்னை குழந்தைன்னு சொன்னே?என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது"தெரியாம சொல்லிட்டியா?"ம்ம்..ஆமா பப்பு, ஏன் குழந்தைன்னு சொன்னா என்ன? நீ குழந்தை தானே! நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!! ****************************************************************பப்புவை அதிகம் அடிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிளாஸ் ரூம் விளையாட்டுகள் : ஜாலிபாஸ், FLAMES இன்னபிற    
November 6, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

அமித்து அம்மா போட்டிருக்கும் இந்த போஸ்ட் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. விளையாட்டுக்காக, இந்த போஸ்ட்!இது கிளாஸ் ரூமில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி! டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு குர(ற)ள் கொடுத்துக்கறோம்....    
October 13, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

எழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்!! Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பப்பு அப்டேட்    
September 28, 2008, 2:19 pm | தலைப்புப் பக்கம்

பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட் நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!! கதைப்புத்தகங்கள் - சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பப்பு டைம்ஸ்    
September 17, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

அரசியல்"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்."ராஸ்கல்"ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!ம்ம்ம்...!(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)Lateral thinkingபப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின் அவள்தான் திருப்புவாள். அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,பப்பு, திருப்பு..புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்    
September 17, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன். தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?    
September 4, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!! அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!! இல்ல..இது ஆயா!! பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!! இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா? அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!! (எனக்குத் தெரிந்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

Princess Messy's    
September 4, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

Bright and Messy pictures!! ***************************************************************************நேற்று அதிகாலை எனது அம்மா வந்திருந்தார்கள். பப்பு வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்து விட்டாள்.இன்னும் கொஞ்சம் தூங்கலாமேயென்று நான் புரண்டுக்கொண்டிருதேன்...பப்பு விடவில்லை!பப்பு, வடலூர் ஆயா வந்திருக்காங்க, போய் பாரேன்!!நீயும் வா...நீயே போய் பாரு பப்பு!!கதவைத் திறந்து வெளியே சென்று, ஆயாவை பார்த்த பப்பு,"ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

தேவதைக்கதைகளைத் தேடி    
August 26, 2008, 1:05 pm | தலைப்புப் பக்கம்

பப்புவுக்கு ஃபெய்ரி டேல்ஸ் சொல்லலாமென்று புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்!!திகைப்புதான் மேலிட்டது!! ஏனெனில், நான் பார்த்த எல்லா கதைகளிலும் ஏதாவதொரு நெகடிவ்அம்சம் இருக்கிறது!! புத்தகத்தில் முதலில் இருந்தது ஸ்நோவொய்ட் கதை.அதை சொல்லவதற்கு எனக்கு சற்றும் விருப்பமில்லை! "who is the fairest of them all"வெண்ணிறம்/சிவப்பு தான் உயர்ந்தது என்று சொல்ல தோன்றவில்லை!மேலும், stepmother/சித்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஏன்/எப்படி ??    
August 23, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

பிறர் புரிந்துக்கொள்ள இயலாத பப்புவின் சில பேச்சுக்கள் எனக்கு மட்டும் புரிவது எப்படி?!பப்புவை கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்றால், நான் பப்புவை மட்டுமே பார்க்கிறேனே, என்னை பார்க்க மறப்பதெப்படி?!என் ஆயாவின் மாத்திரைகள் கீழே விழுந்த இடம் பப்புவின் கண்களுக்கு மட்டும் தெரிவது எப்படி??உறவினர்கள் போனில் பேசும்போது கூப்பிட்டால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச மறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பப்பு என்றொரு பூ    
August 16, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

இரவு நீண்ட நேரமாகியும் தூங்காததால், பப்புவோடு விளையாட மறுத்து“எனக்கு முதுகு வலிக்குது, நான் தூங்க போறேன் பப்பு” என்று படுத்துவிட்டேன்.கதவை திறந்து வெளியே சென்ற பப்பு என்ன செய்கிறாள் எனத் தொடர்ந்தபோது,அவள் அத்தையிடம் “அம்மாவுக்கு முதுகு வலிக்குது, தைலம் எடுத்துக்குடு”எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்! இந்தப் பெண் என்னை பூரிப்பூட்டுகிறாள் !!பப்பு, abcd சொல்லு!! z வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

a ப்பார் ஆப்பிள்    
July 24, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

நன்றி சர்வேசன்! நல்ல முயற்சி!இதோ நான் அடிக்கடி செல்லும் இணையப்பக்கங்கள்!! alibaba - எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் தேடலாம், நுகர்வோர்களுக்கானது!!babycenter - குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு இன்ன பிற!!CHETANA - என் SIL- க்கு வேலை தேடும் முயற்சியில்!esnips - இந்த புத்தகமோ,பாடலோ, இங்கு கிடைக்கும், யராவது வலையேற்றியிருந்தால்!!google - அறிமுகம் தேவையில்லைibnlive - செய்திகளுக்காகjoelonsoftware - இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தூர்தர்ஷனும் கேபிள் டீவியும்!!    
July 23, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் நாஸ்டால்ஜிக்...!! இப்போ எத்தனையோ சானல்கள் வந்தாலும், ஒரே மாதிரி நிகழ்ச்சிகள்தான் எல்லாவற்றிலும்!!இசையருவியில் ஒரு பாட்டு போட்டா, அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அதே பாட்டு ஜெயாவின் ம்யூசிக் சானலில்!! ஆனா, தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நாட்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்..மற்றும் வெரைட்டியான நிகழ்ச்சிகள்!! தமிழில் நிகழ்ச்சிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அக்கம்-பக்கம் அக்கா" வும் குர்-குரே ஆன்ட்டியும்    
July 1, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

பப்புவிற்கு அக்கம் பக்கம் பாட்டு மிகவும் பிடிக்கும். த்ரிஷாவையும்!! "அக்கம்-பக்கம் அக்கா" என்பது த்ரிஷாவுக்கு பப்பு வைத்திருக்கும் பெயர்.akkam_pakkkam.amrHosted by eSnipsபப்பு குரலில் "அக்கம் பக்கம்" !! ஃப்ளாஷ்பாக் சிறுவயதில் (பள்ளி நாட்களில்) என்னை கவர்ந்த நடிகை ஜூஹி சாவ்லா! 90களில் மிஸ்.இந்தியாவாக வலம் வந்தவர். ஷாருக்-ஜூஹி காம்போ ம்ம்..!! ஆனால் இப்போது, ஜூஹியை குர்-குரே விளம்பரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீயா நானா @ விஜய் டீவி    
June 4, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன். வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும். பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே. "நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பப்பு - Word Power    
June 3, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு சென்னைகர்நாடகா - பெங்களூருமகாராஷ்ட்ரா - மும்பைகோவா - பாலாஜி பனாஜி..பாலாஜி! பி.கு:பப்பு மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் சரியாக சொல்கிறாள். And she intentionaly says panaji as balaji. (பப்பு @ 11 மாதங்களில்)பப்பு, ஏன் அத்தைய கிள்ளறே?"சும்மா, விளையாட்டுக்கு!"(புதிதாக, இப்பொழுது, பாராட்ட கற்றுக்கொண்டிருக்கிறாள். )"ஆ..சூப்பரா இருக்கே...!" - நான் படுக்கைவிரிப்பை மாற்றிய போது!"இந்த ட்ரெஸ் நல்லா இருக்கே!" -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

கோலங்கள்.. கோலங்கள்!!    
May 30, 2008, 12:27 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகத்தில் நடந்த ரங்கோலி போட்டிக்கு theme என்று ஒன்றும் வேண்டாம் என்பதே எங்களின் தீர்மானமாக இருந்தது. பெரும்பாலனவர்களுக்கு,கோலம் போடுவது முதல் முறை..(ம்ம்..என்னைத்தான் சொல்கிறேன்!!).அதனால், அவரவருக்கு எது எளிதாக போட வருகிறதோ அதை போடலாம் என்று முடிவு செய்தோம்.ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து பேர் என நான்கு டீம். ஒரு டீம் லீடர். சில பல rangoli brain storming sessions - கு பின் ஒரு நாள் ட்ரையல் வேறு. என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சித்திரம்

நான் வளர்கிறேனே..மம்மி!!    
May 26, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

பப்பு சாப்பிட/பால் குடிக்க அடம் பிடிக்கும்போது, ஆதி என்கிற பொம்மைக்கு கொடுக்க போவதாக பாவ்லா காட்டுவேன். பப்பு "ஆதிக்கு குடுக்காதே, நான் குடிக்கறேன்" என்று உடனே வாங்கி சாப்பிட்டு விடுவாள்.சமீபத்தில் (2 வாரங்களுக்கு முன்) அவள் அடம் பிடித்தபோது, ஆதிக்கு கொடுக்க போவதாக சொல்லி பொம்மையை கையில் எடுத்துக் கொண்டேன். "ஆதி குடிடா... டேஸ்டா இருக்கா?" என்றெல்லாம் சொல்லிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

எண்களும் அளவுகளும்    
May 23, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

அம்மா புடிக்குமா உனக்கு??..புடிக்கும்!எவ்ளோ புடிக்கும்?அஞ்ஞ்சு புடிக்கும்..!! பப்பு குறிப்பு: பப்பு எண்களை கற்றுக் கொள்கிறாள். And she thinks five is the maximum!! குழந்தைகள் உலகம்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

கற்றது கம்ப்யூட்டர்... II    
October 16, 2007, 1:59 pm | தலைப்புப் பக்கம்

பாகம் I படிக்க..கற்றது கம்ப்யூட்டர்... Iமக்கள் கொந்தளிக்கிறார்கள். கருத்து கணிப்பு, பேட்டிகள் நடக்கின்றன..சாப்ட்வேர் சமூக ஆர்வலர்...தொடர்ந்து படிக்கவும் »

கற்றது கம்ப்யூட்டர்...    
October 15, 2007, 1:31 pm | தலைப்புப் பக்கம்

நான் ஏன் உனக்கு மெயில் டைப் செய்து எல்லாருக்கும் ஃபார்வர்டு பண்றேன்னா..உன் மெயில் ஐ.டி எனக்குத் தெரியாது. இது இப்படியே ஃபார்வ்ர்டு ஆகி என்னைக்காவது உன் கையில் வந்து சேரும்னுதான். நான்...தொடர்ந்து படிக்கவும் »

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - II    
October 15, 2007, 12:25 pm | தலைப்புப் பக்கம்

90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்?அம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்ன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்று ஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்) உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்? அம்மா ப்ளீஸ்..இனிமே நான்    
October 15, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்

90 களில் டீனேஜை கடந்தவரா நீங்கள்?அம்மா ப்ளீஸ்..இனிமே நான் ஒழுங்கா படிக்கறேன்...நாமளும் கேபிள் கனெக்க்ஷன் வாங்கலாம்..அம்மா..ப்ளீஸ் - என்றுஸ்டார் டீ.வீ, எம் டீ.வீ பார்க்க (1992/1993களில்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

கற்றது தமிழ்...    
October 8, 2007, 10:19 am | தலைப்புப் பக்கம்

பிரபாகரின் தற்கொலை முயற்சியிலிருந்து துவங்குகிறது கதை. தன் தற்கொலைக்கான காரணத்தை எழுதும் கடிதத்தின் வாயிலாக விரிகிறது காட்சிகள். எந்தவித உறுதியானக் காரணமுமின்றி, காவல்துறையினரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

என் பதின்ம வயது பாப் பாடல்கள் - I    
October 5, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

பாப் பாடல்கள் என்னை எப்போதுமே ஈர்ப்பவை. அதுவும் இந்தி பாப் மீது அளவிட முடியாத காதல் உண்டு!முன்பு தூர்தர்ஷன் காலத்தில் ஹாட் ஸ்பாட் என்று ஒரு நிகழ்ச்சி சனி இரவுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை