மாற்று! » பதிவர்கள்

கையேடு

19 ஜூலை 2009 ஜுபீடரில் நடந்தது என்ன???    
August 3, 2009, 8:27 am | தலைப்புப் பக்கம்

19ஜூலை 2009, ஆஸ்திரேலியாவிலுள்ள தொடக்க நிலை வானியல் ஆய்வாளரான "Anthony Wesley" என்பவர் தனது விட்டின் கொள்ளைப்புறத்திலுள்ள தனது தொலைநோக்கி மூலம், ஜுபீடர் கோளை படம்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் ஜூபீடரின் செந்நிற உதயத்தில் தனது கவனத்தைக் கொண்டிருந்த போது, ஜூபீடரின் தென் துருவத்தில் ஒரு கரிய புகைமண்டலத்தைக் கண்டிருக்கிறார். இது ஜுபீடரில் தோன்றும் வழக்கமான புழுதிப்புயல் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - ல...    
June 4, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளருபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.htmlஇனி அக்கட்டுரையிலிருந்து.."L'ONU a...தொடர்ந்து படிக்கவும் »

ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்    
October 3, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் ஆன்மீகம்

ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை    
August 11, 2008, 11:33 am | தலைப்புப் பக்கம்

ஆன்மீகம் - கிரகிப்பு - I முந்தய பதிவின் தொடர்ச்சி. "மதம் சாராத ஆன்மீகம் என்பது, மனிதனின் சூழல் மற்றும் கிரகிப்புத் தன்மை சார்ந்த, பொதுஅறிவின் சுயஆர்வத்தினால் ஏற்பட்ட கருத்தாக்கத்தின் பரிணாம வெளிப்பாடு." - இத்தொடரின் கருப்பொருளாகயிருப்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்ட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. II.ஆன்மீகம் - இயற்கை. ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்பது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மெய்யியல்

ஆன்மீகம் - கிரகிப்பு - I    
August 10, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

இதுபோன்ற கட்டுரைகளை எழுதத்தான் வேண்டுமா, என்ற அயற்சியினூடே பலகாலமாக இதுபோன்ற பேசுபொருட்களிலிருந்து விலகியேயிருந்தாலும், எனக்குள்ளிருக்கும் சாத்தான் “இருள் பரவட்டும்” என்ற நோக்கில் எனது கணினியையும் எனது நேரத்தையும் எடுத்துக்கொண்டது. அதனால், போற்றுதலும் தூற்றுதலும் போகட்டும் இறைவனை வாழவைக்கும் சாத்தானுக்கே.[1] இக்கட்டுரை அறிவுரையுமல்ல, அறவுரையுமல்ல, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

PIT - மார்ச்2008 - புகைப்படங்கள்    
March 3, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படப் போட்டிக்காக பொழுதுபோக்காக ஒரு பதிவு.1. எங்க ஊர் அர்த்தநாரி2. கால்வாயில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்ஆனா எல்லா புகைப்படமும் அறிவிப்புக்கு முன்னரே எடுத்ததுதான். எல்லாம் எங்க ஊர் குளத்திலும், கால்வாயிலும் எடுத்ததுதான்.இவை எதுவும் மென்பொருளைப் பயனபடுத்தி மாற்றம் செய்யப்பட்டவையல்ல. அப்படியே, கொடுத்திருக்கிறேன். விமர்சனங்கள்: நல்லதோ, கெட்டதோ தாராளமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

இறப்பு - உரையாடல் - IV - இதழுதிர்தல்    
March 3, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

இறப்பு பற்றிய தொடருரையாடலில் சென்ற பகுதியில் இறப்பதற்கு நிர்பந்திக்கப்பட்ட ஒரு இருதயச்செல்லைப்பற்றிப் பேசினோம். அவ்வகை நிர்பந்திக்கப்பட்ட இறப்பு (Necrosis) முறை மிகவும் கொடூரமான அல்லது ஒரு சீரற்ற நிகழ்வு என்றும் பார்த்தோம். ஆனால், இறப்பு எப்போதும் கொடூரமானதாக இருப்பதில்லை. இயற்கை அல்லது நிர்ணயிக்கப்பட்ட செல் இறப்பு (Programmed Cell Death -PCD) அபோடொசிஸ் (Apoptosis) என்றழைக்கப்படுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இறப்பு - உரையாடல் - I    
February 2, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

இறப்பு - கண்முன்னே நிகழும் ஒரு வாழ்வியல் யதார்த்தம், என்பதையும் தாண்டி, தாமும் ஒரு நாள் இல்லாமல் போயிவிடுவோம் என்ற சிந்தனை ஒரு விநாடியேனும் நம்மை உலுக்கத்தான் செய்கிறது, அல்லது ஒரு வெறுமையை ஒரு நொடிப்பொழுதாவது நம்மைச் சுற்றி படரச் செய்துவிட்டுத்தான அகல்கிறது. இறப்பு குறித்துப் பேசாத தத்துவங்களும் தத்துவ ஞானிகளும் மிகவும் அரிது. இறப்பு குறித்தான அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழ்வழிக்கல்வி - தமிழ்வழிச்சிந்தனை - சில முரண்களும் சந்தேகங்களும்    
January 14, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்

தமிழ், என்ற ஒரு மொழியாகத், தமிழின் இலக்கிய வளர்ச்சி மற்றும் அதன் வெவ்வேறு பரிமாணங்களையும் பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவுமில்லாததால், துறை சார்ந்த தமிழ் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து சில சந்தேகங்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். துறை சார்ந்த தமிழ் என்பது நவீனக் கல்விமுறையின் பெரும் பிரிவுகளான அறிவியல், கணிதம், மருத்துவம் மற்றும் சில பொறியியல் சார்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி