மாற்று! » பதிவர்கள்

குட்டி ரேவதி

குளிர்கால ரயில்பயணம்    
January 1, 2010, 6:39 pm | தலைப்புப் பக்கம்

அன்றாட வாழ்வில் ரயில் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொருளாதார வசதிகள் பயணநேரத்தைக் குறுக்கும் விமானப்பயணத்திற்கு அனுமதிப்பதில்லை. நேரத்தை நீட்டித்தும் மெளனத்தைத் திடப்படுத்தியும் தொடரும் இரயில் பயணம் மிகவும் எனக்கு வழக்கமானதாகவும் அதனாலேயே பிடித்தமானதாகவும் ஆகிவிட்டது. சமீபத்தில், டில்லி வரையிலும் பின்பு அங்கிருந்து சண்டிகர் வரையிலும் பயணிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பொது வெளி    
December 20, 2009, 5:35 pm | தலைப்புப் பக்கம்

பொது வெளி எது என்பதை ஆண்களை மையமிட்ட சமூகம் தான் தீர்மானிக்கிறது என்பது பழைய தகவல் தான். ஆனால் பெண்களுக்கு அது என்றுமே புதிய செயல்பாட்டைக் கோருவது. அதை முறியடிக்க வேண்டி அவ்வெளியுடன் முதன் முதலாக மோத வேண்டியிருக்கும் பெண்களும், அதை படைப்பாக்க வெளிக்குள் கொண்டு வர வேண்டிய பெண்களும் தாம் போராடவேண்டியிருக்கிறது. இதை ஆண்களின் அறிவுத் திமிர் அல்ல, எல்லாம் அறிந்ததான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இரண்டடுக்குச் சிந்தனை    
November 17, 2009, 6:24 pm | தலைப்புப் பக்கம்

பழங்களைத் தின்று விதைகளைக் கழிக்கும் போதேல்லாம் தேடுகிறேன் ஜன்னலுக்கு வெளியே அந்தப் பக்கம் ஒரு சிறு மண்நிலத்தை. ஆனால் விதைகள் எப்பொழுதும் சிமெண்ட் தரையைத் தான் மோதி உடைகின்றன.ஏராளமான தோழிகள் வாழ்க்கையின் அந்தரங்கம் வரை தொட்டு விட்டு ஏதுமே நடவாதது போல் வெளியேறுகின்றனர், எனில் அவர்கள் ஆண்களிடம் அன்னியோன்யம் தொடுவது எப்படி?மனதுக்குள் ஏராளமான கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புனைவு    
November 6, 2009, 5:43 pm | தலைப்புப் பக்கம்

முன்பு போல் நீயும் நானுமினி வாழ இயலாது என்றுன்உதடுகளும் விரல்களும் ஒரு சேர பகன்ற சமயம்வலிகளை கொதிக்கும் தேநீர் இலைகளென்றெண்ணிஇனி ஒரு போதும் பருகப் போவதில்லை என்றும்கண்ணாடி தாக்குண்டு உடைந்து சிதறிக் கிடந்ததானஓர் அவலம் பற்றிய வெளியிலிருந்துவேறு வேறு கதவுகளைத் திறந்து பிரிந்தோம்வேறு வேறு புனைவுகளின் எலும்புக் கூடுகள் வழியேஇருமையான காலங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: