மாற்று! » பதிவர்கள்

குட்டி செல்வன்

நான் நிலவு அலைகள்    
October 14, 2008, 12:21 pm | தலைப்புப் பக்கம்

முதன் முறை கடலைப் பார்த்தபோது ஏற்பட்ட பூரிப்பும் உற்சாகமும் இன்று இல்லை வ‌ழ‌க்க‌ம்போல‌ கரைத் த‌ழுவி விலகு‌ம் அலைக‌ள் அவைகளில் ஓடி கால் ந‌னைத்துக் குதுக‌லிக்கும் சிறார்க‌ள் க‌வ‌லைகளற்று மேலே பறக்கும் ப‌ட்ட‌ங்க‌ள் என எதையும் பொருட்ப‌டுத்தாம‌ல் மண‌லில் அமர்ந்தவாறு எதிர்பார்த்திருக்கின்றேன் இம்மாலைப் பொழுதை எல்லாவ‌ற்றையும்விட என்னுடன் தின‌மும் இருக்கின்ற‌து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உடைவதில்லை வெறுமைகள்    
October 3, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

இம்மழை நாட்களில் உன்னிடம் பேசுவதற்கென்று ஏதுமிருப்பதில்லை எங்கு சென்றாலும் பின்தொடர்கின்றன ஈடுசெய்ய‌ முடியாத சில இழப்புகள் அவற்றை தவிர்த்து இயல்பாக இருக்க முனைகிறேன் பழைய‌ நினைவுகளில் புதைந்து மெதுவாய் ந‌ட‌க்கையில் முற்ற‌த்துத் தூணில் சுயமற்றுச் சாய்ந்துக் கிடக்கையில் அசைவ‌ற்றக் குள‌த்தில் த‌னியேக் க‌ல்லெறிகையில் நின்று போன‌ ம‌ழையை வெறிக்கையில் ம‌ங்கிய‌...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காட்டுப் பூக்கள்    
September 23, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்

மென்மையாய் தடவி ரசிப்பதற்கும் வ‌ன்மையாய் பற்றிப் பறிப்பதற்கும் எவருமில்லையெனினும் பூத்து உதிரத்தான் செய்கின்றன காட்டுப் பூக்கள்##நீ இப்படி இருக்கலாமென நானும் நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும் நினைப்பதில் தவறொன்றுமில்லை எதிர்பார்ப்பதுதான் மனித இயல்பு என்றானப்பின் ## வேகமாக நடப்பதாக எண்ணி மெதுவாக நடக்கும் எருமையை எள்ளுகின்றேன் கர்வத்தில் மிதக்கும் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான் தனிமை    
September 18, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

இங்கு யவருமில்லை என் யவ்வனத்தின் புனைவுகளைப் பேச புரளிப் பாடித் திரிய உறவுகளனைத்தையும் மறந்துவிட்டு இருக்கின்றேன் இந்த பச்சைக் காட்டுக்குள் அமைதியாய் ஆரவாரமற்று மிக இயல்பாய் இன்று நான் தனித்தப் பறவை கடைசி இலையும் உதிர்ந்துவிட்ட மரம் எஞ்சிய மழைத்துளி மெளனத்தின் பிரதிபலிப்பு கொஞ்சம் இயற்கை ஓர் அசையும் உயிரினம் கேட்டிராத‌ மென் இசை எரியும் ஒற்றைச் சூரிய‌ன் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை