மாற்று! » பதிவர்கள்

குகன்

ஆதவன் எழுதிய 'என் பெயர் ராமசேஷன்'    
May 21, 2009, 10:23 am | தலைப்புப் பக்கம்

அதிகமான ஆங்கில வார்த்தைகளில் எழுதப்பட்ட தமிழ் நாவல். ஆங்கில அகராதி பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் இந்த தமிழ் நாவலை படிக்க வேண்டும். காரணம், கதை மேல்தட்டு மனிதர்கள் சுற்றி நகர்வதால் வாக்கியத்திற்கு 'நான்கு வார்த்தை ' ஆங்கிலம் பேசுவது போல் எழுதியிருக்கிறார் ஆதவன். 1980ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வந்த 'என் பெயர் ராமசேஷன்' நாவல், உயிர்மை பதிப்பகத்தின் மூலம் இரண்டாம் பதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உலக சினிமா : Curious Case of Benjamin Button    
April 17, 2009, 1:27 am | தலைப்புப் பக்கம்

ஒருவன் கிழவனாக பிறந்து குழந்தையாக இறந்தால் எப்படி இருக்கும்....? எம்பது வயது கிழவன் இருபது வயது பெண்ணை 'அம்மா' என்று அழைப்பான். மகள் தன்னை விட வயதானவளாக தெரிவாள். பல விஷயங்கள் தெரிந்த பிறகு தான் குழந்தை பருவத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அள்ளவா.... இது தான் “Curious Case of Benjamin Button” இது தான் படத்தின் கதை கரு.நீயூ ஓர்லியன்ஸ் மருத்துவமனையில் வயதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா : Million Dollar Baby    
March 30, 2009, 12:18 am | தலைப்புப் பக்கம்

கதாநாயகர்களை மையமாக கொண்ட சினிமாவில் மிக அறிதாக தான் கதாநாயகிகள் பற்றின படங்கள் வருகின்றன. இதில் ஹாலிவுட், பாலிவுட், கொலிவுட் என்று விதிவிளக்கில்லை. அப்படியே வந்தாலும் வியாபார ரிதியாக வெற்றி பெறுவது என்பது மிகவும் சிரமம். ( அப்படி வெற்றி பெற்றாலும் 'அம்மன்' படமாக தான் இருக்கும்)ஹாலிவுட்டில் அத்திப்பூ புத்தது போல் கதாநாயகிகள் மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் வெற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா : Spring, Summer, Fall, Winter... and Spring    
March 4, 2009, 4:30 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக ‘கேபிள்’ சங்கர் அண்ணனிடம் "உலக சினிமாவை பற்றி எழுதுங்கள், மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று சொல்லியிருக்கிறேன். இப்போது தனது "STAR MAKER", "No Country For Old Men" பதிவு மூலம் நமக்கு உலக சினிமாவை அறிமுக செய்துள்ளார். அவரை சொல்லி விட்டு நான் சும்மா இருந்தால் எப்படி....? இதோ நான் பார்த்த உலக சினிமா... "Spring, Summer, Fall, Winter... and Spring" (2003.நல்ல திரைப்படங்களுக்கு மொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்'    
January 4, 2009, 1:45 am | தலைப்புப் பக்கம்

'நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'    
December 29, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.Lஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எஸ்.ராமகிருஷ்ணனின் 'அரவான்'    
December 14, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்

விலை.90. பக்கங்கள் -166‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ !! அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்    
November 28, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

நாகூர் ரூமி.எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்    
September 8, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்    
May 20, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

இன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஜெயா நியூஸ் vs சன் நியூஸ்    
April 2, 2008, 10:45 am | தலைப்புப் பக்கம்

JAYA NEWS MANAGER : என்னப்பா.... நியூஸ் படிக்க நம்ம ஆளு எங்க...?ASST.. MANAGER : அவரு நேத்து resign பண்ணி வேற டி.வியில சேர்ந்துட்டாரு...JAYA NEWS MANAGER : அட பாவி... இப்போ அவன் எந்த டி.வியில இருக்கான்..?ASST.. : மெகா டி.வி ஆபர் இருந்தது... அத வச்சு சன் டி.வி ஆபர் வாங்கி... இப்போ ராஜ் டி.வியில நியூஸ் படிக்கிறான்...JAYA NEWS MANAGER : : வர..வர... டி.வி க்கூட ஐ.டி கம்பெனி மாதிரி ஆயிடுச்சு... சரி..அத விடு... இப்போ நமக்கு நியூஸ் படிக்க போற ஆளு யாரு...?ASST.. : ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தேவதை தோழி    
March 24, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிக்னல் தேவதை    
March 24, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

நில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Test tube தேவதை    
March 24, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry labs.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள். Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அ வ ளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

6 (சிக்ஸ்) சிக்மா    
March 24, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

விலை.70. சிபி கே. சாலமன்.கிழக்கு பதிப்பகம்இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

முசோலினி    
March 24, 2008, 9:03 am | தலைப்புப் பக்கம்

வெ.சாமிநாத சர்மாவிலை.60., ராமையயா பதிப்பகம்இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யூதர்கள்    
March 8, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

முகில்.விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டு தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

காதல் துளிகள் - 3    
February 28, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

தேவதைகள் மாநாடு என்று அறிவிப்பை கேட்டேன் !எனக்கு சிரிப்பு தான் வந்ததுநீ மட்டும் தனியாகஅங்கு என்ன செய்ய போகிறாய்...?********கவிதை -தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் !காதல் கவிதை -எச்சில் தபால்தாள் ஒட்டப்படாமல்வேறும் எச்சில் மட்டும் இருக்கும் கடிதம்********நீ என்னைஒவ்வொரு முறையும் கடக்கும் போதும்என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை