மாற்று! » பதிவர்கள்

கீதா

கேரட் சட்னி / carrot chutney    
June 1, 2008, 2:47 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் கேரட் - 4 பச்சை மிளகாய் - 3 பூண்டு - 3 பற்கள் புளி - நெல்லிக்காய் அளவு எள் - 1 தே. கரண்டி சீரகம் - 1 தே. கரண்டி தேங்காய் துருவல் - 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்) உப்பு - தேவையான அளவு கடுகு, உளுந்து, பெருங்காயம் - தாளிக்க எண்ணை - சிறிதளவு செய்முறை கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai    
May 23, 2008, 4:12 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் 2 பேருக்கு பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] - 1 கப் தயிர் - 1/2 கப் பச்சை மிளகாய் - 5 அல்லது 6 பூண்டு - 3 அல்லது 4 பல் உப்பு தேவையான அளவு செய்முறை பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும். நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஃப்ரைட் இட்லி / fried idly    
May 22, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் மீதமான இட்லிகள் : 5/6 மைதா மாவு : 5 தே. கரண்டி மிளகாய்த் தூள்: 1 தே. கரண்டி (உங்கள் தேவைக்கு ஏற்ப) பிரட் கிரம்ஸ்: 1/2 கப் உப்பு : தேவையான அளவு எண்ணை பொரித்தெடுக்க செய்முறை: இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு) ஒரு அகலமான தட்டில் பிரட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அடுப்பங்கரை    
May 19, 2008, 5:17 pm | தலைப்புப் பக்கம்

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அருமை அம்மாவுக்கு..    
May 10, 2008, 3:36 pm | தலைப்புப் பக்கம்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ****** என்ன எழுதுவதம்மா எதை எழுத நான் அம்மா என்றழைப்பதில்தான் எத்தனை சுகமெனக்கு.. உன் புடவைத் தலைப்புக்குள் ஒளிந்து கொண்டிருப்பேனே.. உன் மடிமீது தலைவைத்து உறங்கிப் போவேனே.. உன் கையால் சோறுண்ண நடுநிசியில் விழிப்பேனே.. வேலைக்கு நீ சென்றால்கூட வாசலிலேயே படுத்திருப்பேன் தெருமுனையில் உன்முகத்தை காணவேண்டித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோக்    
May 3, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

அனுதினமும் உறிஞ்சியதால் காலியானது நிலத்தடி நீர் [இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது. என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

பப்பாளி பழ அல்வா (Papaya halwa )    
May 2, 2008, 10:47 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள் : 3 கப் சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப) நெய் : 4 தே. கரண்டி காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப) ஏலப்பொடி - சிறிதளவு முந்திரி - 7 பாதாம் பருப்பு - 7 செய்முறை: முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தொடரும் தடுப்பூசி மரணங்கள்    
May 1, 2008, 9:03 pm | தலைப்புப் பக்கம்

திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

ரவா பொங்கல் / Rawa pongal    
April 29, 2008, 2:22 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் (2 பேருக்கு) _________________________________ ரவை - 1 1/2 கப் பயத்தம் பருப்பு - 1/2 கப் முந்திரி - சிறிதளவு மிளகு - 1 தே. கரண்டி சீரகம் - 1 தே. கரண்டி இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 1 அல்லது 2 உப்பு தேவையான அளவு நெய் தாளிக்க செய்முறை ___________ *நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். *மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும். *பச்சை மிளகாயை நீளவாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கத்திரிக்காய் சட்னி    
April 27, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்

(4 பேருக்கு)தேவையான பொருட்கள் _________________________________ பெரிய கத்திரிக்காய் - 5 வரமிளகாய் - 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்) உளுந்து - 2 தே. கரண்டி புளி - சிறிதளவு உப்பு தேவையான அளவு சர்க்கரை - 1 தே.கரண்டி (விருப்பமானால்) கடுகு,உளுந்து,பெருங்காயம் - தாளிக்க எண்ணை - தாளிக்க செய்முறை ___________ * கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கண்ணாமூச்சி..    
April 26, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

நீ வழக்கமாக ஒளியுமிடம் தெரியாதா எனக்கு?? ஆனாலும்… வீடு முழுதும் தேடி அலைவேன்.. ‘த்த்தோ நிமி’ என்று தலைக்காட்டி நீ சிரிக்கும் அழகில் கரைய.. oOo சும்மாவேனும் கையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருப்பேன் ‘அம்மா’ என்றணைத்தபடி என் முகம்நோக்கும் உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கட்லெட் (Vegetable cutlet)    
April 25, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு : 7 குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது) கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது) பிரட் கிரம்ஸ் : 1 கப் சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணை தேவையான அளவு உப்பு தேவையான அளவு சிறிதளவு சோம்பு (உடைத்தது.) செய்முறை: * முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து தண்ணீர்விடாமல் கெட்டியாக மசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அழகுக்குட்டி நிவிம்மா..    
April 22, 2008, 3:43 pm | தலைப்புப் பக்கம்

ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வாழைக்காய் சிப்ஸ்    
April 11, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் ******************** வாழைக்காய் : 3 மிளகு : 4 தே.க உப்பு : தேவையான அளவு எண்ணை : பொரித்தெடுக்க செய்முறை: ********** முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை தயாராக வைத்திருக்கவும். வாழைக்காயின் மேல்தோலை நீக்கி அதனை மெலியதாக வட்ட வடிவில் சீவி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். ஒரு தூய்மையான (வெள்ளைத்)துணியின் மீது இந்த துண்டுகளை பரப்பி சிறிது நேரம் உலற விடவும். மிளகை (dry) மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு