மாற்று! » பதிவர்கள்

கிருத்திகா

முகமூடிக்கவிதைகள் - 4    
October 16, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

இயலாமைபரிதாபங்களை யாசித்தல்கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.இயலாமைகளை உரத்துச்சொல்வதைதடுக்கிறது சுயமரியாதைநடப்பின் இருப்புகளைஉதறவோ உடைக்கவோ முடியாதஇயல்பின் மனநிலையில்கரம்நீட்டித்தரும்உதவியின் கோப்பைகளைஉடைத்தெறியத்துடிக்கிறது மனதுஏனெனில்யாசித்தலின் எதிர்மறையாய்இதையேனும் செய்வதில்நிம்மதிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

50 வது பதிவு - நட்பின் பதிவு    
October 8, 2008, 10:58 am | தலைப்புப் பக்கம்

நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

முகமூடிக்கவிதைகள் – முகமூடியின் கவிதைகள்    
September 26, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

01. குறுக்கும் நெடுக்கும் கோடுகள் ஏதுமின்றி நீண்டு செல்கிறது நெடுஞ்சாலையின் மஞ்சள் கோடு வாழ்க்கை அதுபோலில்லை அது போலியில்லை 02. நாய்களோ பூனைகளோ குதிரைகளோ எனக்கு நெருக்கமில்லை உருவகப்படுத்த விலங்கினம் தேடினேன் என்னுள்ளிருக்கும் தாழ்திறவா ஆரண்ய கதவுகளில் “இடமில்லை” அட்டைகள் 03. பயணங்கள் தன் இலக்குகளை இன்றில்லாவிடினும் நாளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இளம் பிராயத்தின் மொழி    
August 20, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

பேசும் மொழியின் பல சாத்தியக்கூறுகளை நமக்கு முன் கடை பரப்பிச்சென்றதான இளம் பருவங்கள் இப்போதைய நகரத்து இளம் தலை முறைகளுக்கு ஆட்பட்டுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி. மொழி என்பதனை சம்பாஷானைகளுக்குண்டான கருவி என்று எடுத்துக்கொண்டால், உடல் மொழியும், அந்நிய பாஷைகளும் அதனதன் ஆதிக்கத்தை இளசுகளிடையே பதித்து வைத்திருந்தாலும் நாம் சிறு வயதில் கிராமப்புறங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கதை சொல்லிக்கு புரிந்த கதை    
August 16, 2008, 9:23 am | தலைப்புப் பக்கம்

இரண்டு பேரை மட்டும் வைத்து கதை சொல்ல முடியுமா, முடியும் என்று தான் தோன்றுகிறது ஏனெனில் என்னுடைய இந்த கதையில் சியாமளியும் அவள் அம்மாவும் மட்டும் தான் கதை மாந்தர்கள். அவள் கணவனோ, இல்லை குழந்தைகளை கதைக்குள் வரத்தேவையில்லை என முடிவு செய்திருக்கிறேன்.. கதை சொல்லியின் முடிவுகளாலாயே எல்லா கதைகளும் கட்டமைக்கப்படுகின்றனவா இல்லை படைப்பு அவனை மீறி படைத்துக்கொள்கிறதா முடிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அப்பா......    
May 15, 2008, 9:59 am | தலைப்புப் பக்கம்

அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

குருவி தலையில் பனங்காய் – சம்மர் கேம்ப் தலைவலி (பிள்ளைகளுக்கு)    
March 24, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

இதோ வந்தாச்சு பள்ளிப் பிள்ளைகளுக்கான விடுமுறைக்காலம். அதே சமயம் அத்தனை தினசரிகளிலும் சுவரொட்டிகளிலும் முளைச்சாச்சு விடுமுறைக்கால வகுப்புக்களுக்கான விளம்பரங்கள்.என் மகனின் நன்பனின் அம்மா “எங்க வீட்டு சிபிய இந்த தடவை மூணு சம்மர் கேம்ப்ல சேர்த்திருக்கேன்னு” ரொம்ப பெருமையா சொன்னாங்க எனக்கு ரொம்ப பாவமா இருந்தது.பள்ளி நாட்களிலாவது பிள்ளைகள் விடுப்பு எடுக்கலாம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.    
March 20, 2008, 9:53 am | தலைப்புப் பக்கம்

11 கி.மீ துரத்தை 20 நிமிஷத்தில் சென்னை வாகன நெரிசலில் கடந்து செல்ல முடியுமா??? முடியும் 11 கி.மீ 14 கி.மீ ஆவதை பொருட்படுத்தாமல் பிரதான சாலை சிக்னல்களை விலக்கிவிட்டு தட்டு முட்டு சந்துகளில் புகுந்து புறப்பட்டால் உங்களால் வெகு எளிதில் 20 நிமிடங்களில் கடந்து விடலாம்.என் ஆபிஸ் மாறினப்புறம் மொதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப பொறுப்பா என்னோட 2 வீலர்ல என் வீட்டில் இருந்து புறப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நான் (சரவணன்)வித்யா – வெளியீடு – கிழக்கு பதிப்பகம் – ஒரு பார்வை    
January 12, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

இதை இந்த கணம் செய்தே ஆக வேண்டும் என்ற தவிப்புக்களை கடந்து செல்லும் இயல்புகளோடே நான் அதிகம் பழக்கப்பட்டிருந்தாலும்,இந்தப் புத்தகம் என் அத்தனை இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டது. என்னால் இந்த என்னவென்று விவரிக்க இயலாத என்னுள் ஊரும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இந்த இரவை என் தூக்கத்தை எதிர் கொள்ள முடியாது என்ற தவிப்பு மிகுந்த ஒரு உணர்ச்சிப்போராட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்