மாற்று! » பதிவர்கள்

கிரி

அடப்போங்கய்யா! நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும்    
February 2, 2009, 9:30 am | தலைப்புப் பக்கம்

தமிழகம் முழுவதும் (இந்தியா முழுவதும் என்று கூற ஆசை ஆனால் வேதனையான உண்மை தடுக்கிறது) ஈழ தமிழர்களின் பிரச்சனை தீர வேண்டும் என்று பொதுமக்கள் நினைத்து கொண்டு இருக்க, அரசியல் வியாதிகளோ அதை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் தினமும் வீர அறிக்கை விட்டுக்கொண்டு போராடுவோம் போராடுவோம் என்று வெற்று பேச்சு பேசி கொண்டு இருக்கிறார்கள். தங்களை தன்மான தமிழர்களாக காட்டிக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

"Layoff" (ஆட்குறைப்பு) - என் அனுபவங்கள்+பரிந்துரைகள் ((இறுதி...    
December 31, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் தனக்கு கஷ்டம் வரும் போது தான் அதன் வலி புரியும், மற்றவர்களுக்கு ஏற்படும் போது ஓரளவிற்கு தான் உணர முடியுமே தவிர முழுதும் அறிய முடியாது..அதனால தான் முன்னாடியே சொல்லிட்டாங்க போல "தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் திருகு வலியும்" என்று :-) Layoff பற்றி கேள்வி பட்டு இருந்தாலும், தெரிந்த நிறுவனங்களில் நடந்து கொண்டு இருந்தாலும் அது பற்றி முக்கியத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 3)    
September 16, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

இந்தியர்கள் எங்கே சென்றாலும் அவர்கள் பழக்கம் மாறாது என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வை கூறலாம், சிங்கையில் மற்ற இடங்களில் இதை போல மோசம் இல்லை சிங்கப்பூரிலேயே மிகவும் பழைமையான இடங்களில் லிட்டில் இந்தியாவும் ஒன்று சிங்கப்பூருக்கே த்ரிஷ்டியாக இந்த இடம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது இது என் தனிப்பட்ட கருத்து சிங்கை முழுவதும் சுத்தம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 2)    
September 15, 2008, 7:16 pm | தலைப்புப் பக்கம்

சிங்கை மக்கள்  சாதுவானவர்கள், வேலை வாங்குவதில் கறார் பேர்வழிகள். நம்ம ஊரில் ஒரு சிலரை பொது இடங்களில் பார்த்தால் ரவுடி தோற்றத்துடன் கொஞ்சம் பயப்படும்படியான தோற்றத்தில் இருப்பார்கள், இங்கே அவ்வாறு யாரும் தெரிவதில்லை (நான் பார்த்த வரை) நம்மவர்களை கண்டால் அவர்கள் அதிசயமாக எல்லாம் பார்க்க மாட்டார்கள், அவரவர்கள் அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு பார்வை    
September 9, 2008, 11:07 pm | தலைப்புப் பக்கம்

சன் டிவி யில் பிலிம் ஃபேர் அவார்ட் கொடுக்கும் நிகழ்ச்சியை காட்டினார்கள் அதில் சரத் குமார் மற்றும் அவரது பெண் லட்சுமி யை பேட்டி எடுத்தார்கள் (வருங்கால ஹீரோயின்), தற்போது தான் லண்டன் ல் இருந்து வந்ததாக கூறினார் சரத் பெண்..ஆங்கிலத்திலேயே அவர் பேச..பேட்டி எடுத்தவர் தமிழ் தெரியாதா என்று கேட்க தமிழ் பேசுவேன் என்று ஆங்கிலத்தில் கூறினார் :-) அப்ப தமிழ்லயே வாழ்த்து கூறுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

குசேலன் - விமர்சனம் அல்ல திரை விமர்சனம்    
August 4, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

நான் குசேலன் வியாழக்கிழமையே பார்த்து விட்டேன். விமர்சனம் எழுதலாம் என்று பார்த்தால், அதற்குள் ரஜினி வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார். அதனால் கோபம் அடைந்து அனைவரும் தாறு மாறாக விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்கள் (ரஜினியையும் படத்தையும்), அவர்கள் கோபத்தில் நியாயம் இருந்ததால் அந்த நேரத்தில் விமர்சனம் என்று செய்தால் அதை விமர்சனமாக யாரும் நினைக்க மாட்டார்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 3    
June 24, 2008, 12:56 pm | தலைப்புப் பக்கம்

நான் என் அக்காவிடம் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்த போது, அவர்கள் வீடு மாறுவதை பற்றி குறிப்பிட்டார்கள், தற்போது பெசன்ட் நகர் பகுதியில் இருக்கிறார்கள், என் மாறுகிறீர்கள் என்று கேட்ட போது. வீட்டிற்கு போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும், தற்போது 6500 Rs கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் ஒப்பந்தம் புதுப்பித்தால் 15000Rs கேட்கிறார்கள் அதனால் அவ்வளவு கொடுக்க முடியாததால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 2    
June 19, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

என் நண்பன் தன்னுடைய திருமணத்திற்காக கொடுத்த (கொடுக்க வைக்கப்பட்ட) பார்ட்டிக்காக எக்மோர் ல் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு உற்சாக பானம் சாப்பிட போனோம். நான் சூடான சமாச்சாரங்கள் குடிக்க மாட்டேன் என்பதால் ட்ராட் பீர் இங்கே கிடைக்கும் என்று அவன் கூறியதால் அங்கே சென்றோம். அன்று தான் IPL 20-20 இறுதி போட்டி அதனால் அங்கே இருந்த தொலைக்காட்சிகளில் ஓடி கொண்டு இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1    
June 17, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)    
June 11, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்

எனக்கு என்னவோ இந்த 20-20 கிரிக்கெட் அவ்வளவா விரும்பி பார்க்க தோணல (IPL போட்டிகள்) ஊருக்கு சென்று இருந்த போது எல்லோரும் உலக கோப்பை ரேஞ்சுக்கு விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் கடைசி போட்டி மட்டுமே பார்த்தேன் அதுவும் ஒரு பகுதி தான். அது நம்மவர்கள் நம்மவர்களேயே எதிர்த்து ஆடியது தான். ஆனால் எனக்கு 20-20 போட்டிகள் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது விரும்பி பார்ப்பேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

என்னுடைய கிராமத்து பயணம் புகைப்படங்களுடன்    
June 4, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற போது புகைப்பட கருவியையும் எடுத்து சென்று இருந்தேன், என் கிராமத்தில் சென்று புகைப்படம் எடுக்கலாம் என்று. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இந்த படம் 1926 ம் ஆண்டு கருங்கற்களால் கட்டப்பட்ட என் வீடு. தெரியாம எங்காவது இடித்தால் மண்டை காலி. வீடு மிக பெரியதாக இருப்பதால் (அந்த காலத்தில் கட்டப்பட்ட வீடு என்பதால்) நடந்து நடந்து கால் வலி வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

என்று தணியும் இந்த மக்களின் கொடூர ரசனை :-(    
May 26, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

இந்த வீடியோ காட்சி மனிதர்கள் மிருகம் ஆகி கொண்டு இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இனி வரும் காலங்களை நினைத்து பயமாக இருக்கிறது, இவர்களின் இந்த நிலை பின்னாளில் எங்கே சென்று முடியும் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது மனிதர்கள் மனிதாபிமானம் என்ற ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நிகழ்படம்

"தம்பி" - ஒரு தாமத திரை விமர்சனம்    
May 26, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

தம்பி படம் சின்னத்திரையில் வந்த போது அதை பார்த்து சரி ஒரு விமர்சனம் எழுதுவோம் என்று முடிவு செய்தேன், கதை அனைவருக்கும் தெரிந்தது தான் என்பதால் அந்த படத்தை பற்றிய என் கண்ணோட்டத்தை பதிவு செய்து இருக்கிறேன். முதலில் இப்படி பட்ட ஒரு கதையை படமாக்க துணிந்த இயக்குனர் சீமானுக்கும் நடித்த மாதவனுக்கும் என் வாழ்த்துக்கள். திரையரங்கிலேயே இந்த படத்தை பார்த்து இருந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"புதிய கட்சி தொடங்குகிறேன்" பீதியை கிளப்பும் நடிகர் கார்த்த...    
May 25, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை சார் இது? இந்த வசனத்தை இப்போது கூறினால் சரியாக இருக்கும். நம்ம நடிகர் கார்த்திக் முன்னாள் பார்வர்ட் பிளாக் (அவரை கட்சியில் !!! இருந்து நீக்கிடாங்கப்பா நீக்கிட்டாங்க) தமிழக தலைவர் பதவியில் இருந்து தன்னை இருந்து நீக்கியதால் வெகுண்டெழுந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு பலரை பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பத்திரிக்கைகளின் "பரபரப்பு" செய்திகள்    
May 24, 2008, 5:03 am | தலைப்புப் பக்கம்

எனக்கு நீண்ட நாட்களாக நம்ம தமிழ் பத்திரிக்கைகள் எழுதும் "வித்யாசமான" தமிழ் பற்றி சந்தேகம். எப்போது இருந்து இந்த பழக்கம் இவர்களுக்கு வந்தது. முன்பு மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வந்த போட்டியில் ஒவ்வொரு பத்திரிக்கையும் வித்யாசமான அணுகுமுறையை பின்பற்றி வந்தது, அதில் தினத்தந்தி செய்திகளின் தலைப்புகள் பிரபலம். தினத்தந்தி படிப்பதற்காகவே டீ கடைக்கு வரும் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

எகிறி அடிக்(காத)கும் கேப்டன் - அரசாங்கம் திரை விமர்சனம்    
May 23, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக நான் கேப்டன் படங்களை பார்ப்பேன், ஆனால் சுதேசி போன்ற படங்களை பார்த்து வெறுத்து போய் இருந்ததால் அதன் பிறகு படத்திற்கே போகவில்லை. சரி நண்பர்கள் பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதை அடுத்து போய் வரலாம் என்று முடிவு செய்து நானும் என் நண்பரும் யிஷுன் ல் உள்ள திரை அரங்கு சென்றோம். திரை அரங்கில் சொல்லிக்கொள்ளும் படி கூட்டம் இல்லை, வார இறுதி நாளாக இருந்தும். சிவாஜி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"    
May 11, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கி உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் தொடரில், விக்கெட்டை குவித்து அனைவரின் கவனத்தையும் திருப்பி புகழின் உச்சிக்கு சென்ற இவர், தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க முடியாததால், அடுத்து வரும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் கதை முடிந்தது என்றே பலரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சுவாரஸ்யம் இல்லாத "குருவி" - திரை விமர்சனம்    
May 3, 2008, 4:29 pm | தலைப்புப் பக்கம்

நேற்று முன்தினம் என் நண்பர் விஜய் ரசிகர் "குருவி" படத்திற்கு முன்பதிவு செய்கிறேன் நீங்கள் வருகிறீர்களா? என்ற கேட்ட போது, நான் சிங்கப்பூர் வந்து 8 மாதங்களாகியும் இன்னும் இங்கு தமிழ் படம் திரை அரங்கு சென்று பார்க்கவில்லை, தசாவதாரம் தான் முதல் படமாக பார்க்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன், ஆனால் படம் பொங்கலுக்கே வருவதாக கூறி இன்னும் வெளியீட்டு தேதி அறிவிக்காததால் இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மரக்கன்று நடும் விழாவும்! அரசியல்வாதிகளும்!    
May 1, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

இன்று செய்தியில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்போவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளதை பார்த்ததும் எனக்கு தோன்றிய எண்ணங்கள். தற்போது எதற்கெடுத்தாலும், மரக்கன்று நடுவது ஒரு விளம்பரம் ஆகி விட்டது. அட! மரக்கன்று நடுவது என்பது நல்ல விஷயம் தானே! அதில் என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்கிறீர்களா? மரக்கன்று நடுவதையும் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஸ்ரீசாந்த் மின்னஞ்சலில் மாட்டிகிட்டு படும் பாடு - இந்தாங்க அடுத்த காமெ...    
April 29, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்

I asked Symonds.. Asked Hayden…. Asked every one……… even asked Kaif….. No one gave me..!! :( :( :( Finally , I got it without asking…. :)))))) ஸ்ரீசாந்த்தை பார்த்தால் எனக்கு வடிவேல் கூறியது தான் நினைவுக்கு வருகிறதுசிக்கிட்டேன்!!! இனி தப்பவா முடியும்.. ஹா ஹா ஹா இது தொடர்பான இன்னொரு இடுகைக்கு இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் - விமர்சனம்    
April 27, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருட உழைப்பு, நடிப்புகளின் மொத்த உருவம் கமல்ஹாசன், கமர்ஷியல் இயக்குனர், விளம்பரத்தின் மறு பெயர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், உலகிலேயே முதல் முறையாக ஒருவர் 10 வேடங்கள், படத்தயாரிப்பு செலவு 80 கோடி, பாடல் வெளியீட்டிற்கு மட்டும் 10 கோடி செலவு என்று செய்திகள் கூறுகின்றன (கொஞ்சம் குறைவு இருக்கலாம்), ஜாக்கிசான் பாடல் வெளியிடல் என்று பிரம்மாண்டகளுடன் அனைவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

IPL Twenty-20 போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கவர்ச்சி பெண்கள்...    
April 26, 2008, 11:22 am | தலைப்புப் பக்கம்

பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்க IPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

Be Indian "Bye" Indian    
April 25, 2008, 7:29 pm | தலைப்புப் பக்கம்

இணையதளத்தில் கிடைத்த ஒரு படம். காதல்தேசம் படத்துல வரும் பாடலின் வரி "True a friendship", எங்க ஊருல நடந்த கோவில் திருவிழா பாட்டு கச்சேரியில் பாடுன ஒரு பெண் அதை "Oooh yeaaa friendship" னு பாடி என்னை கதி கலங்க வைத்தது ...இந்த படத்தை பார்த்ததும் எனக்கோ ஏனோ இது நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

எனது இந்திய பயணம் - சென்னை ஒரு பார்வை    
April 24, 2008, 4:28 pm | தலைப்புப் பக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் காலை 4 மணிக்கு போக்குவரத்து நெரிசல், புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே சாலை அமைக்கும் பணி நடந்ததால் மற்றும் பாதை மிக குறுகலாக இருந்ததாலும், குண்டும் குழியுமாக இருந்ததாலும் இந்த நெரிசல். நம்மை விடுங்கள் பழகி விட்டது, ஒரு வெளிநாட்டினர் வருகிறார் என்றால் அவருக்கு முதல் அனுபவமே இப்படி விமான நிலையத்திலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

என்னுடைய சபரிமலை பயணம் - படங்கள்    
April 22, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை விமான நிலையத்தில் திருடப்பட்ட என் பொருட்கள்    
April 21, 2008, 6:53 pm | தலைப்புப் பக்கம்

நான் இந்த முறை சிங்கப்பூர் ல் இருந்து இந்தியா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தேன். பயணத்திற்காக விமான நிலையம் சென்ற போது வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நான் வரிசையில் சென்று நின்ற போது என் அருகே வந்த ஒருவர் என் அனுமதி இல்லாமலேயே என் பெட்டிகளை ட்ராலியில் வைக்க உதவினார். நான் அவர் ஏர் இந்தியா ஊழியரோ என்று நினைத்து விட்டேன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அடி முட்டாள்களே! உங்கள் வன்முறையை எப்போது நிறுத்த போகிறீர்கள்? - படங்க...    
April 4, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

கன்னடர்கள் மட்டும் தான் முட்டாள் தனமான காரியங்களை செய்வார்களா? ஏன் நாங்கள் செய்ய மாட்டோமா என்று ஒன்றும் தெரியாதவர்களையும் பொது மக்களையும் பாதிப்புக்கு ஆளாக்கும் நம் தமிழர்களை என்னவென்று சொல்வது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத்தில் ஏன் இப்படி வன்முறை ஏற்படுகிறது. காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது. வன்முறைக்கு வன்முறை தான் பதிலா? தமிழர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்