மாற்று! » பதிவர்கள்

கவிதா | Kavitha

ஆட்டோக்கார அண்ணாச்சிகளும் நம் இரத்த அழுத்தமும்..    
October 28, 2010, 3:51 am | தலைப்புப் பக்கம்

ஐயா... இந்த உடம்பை பிரச்சனையில்லாம வைத்துக்கொள்ள என்ன பாடுபடவேண்டி இருக்கு. வயசான காலத்தில் அக்காடான்னு ரெஸ்டு எடுக்காம, தியானம்,டப்பாங்குத்து டான்ஸ், நீச்சல் குளம்'ன்னு தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயற்சி செய்து உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தாலும், ஒரே ஒரு தரம் சென்னை ஆட்டோ வில் போக முடிவு செய்து "ரேட்" கேட்டால் எகுறுது பாருங்க நம்ம பிபி ....ஆஹா... தினமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எம்.ஜி.ஆர் என்ற வில்லன்    
August 9, 2010, 6:21 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் நம்ம மக்கள் இரண்டு பெரும் கட்சிகள் சார்பாக விவாதம் செய்துக்கறாங்க. .அதை படிக்கும் போது, இதை எழுதனும்னு நினைச்சேன். திராவிடம் சின்ன வயசில் இருந்து குடும்பத்தில் ஊற்றி வளர்க்கப்பட்டது. அண்ணா, அவருக்கு அடுத்து கலைஞர் இது தான் எங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்தது, அவர்களை பற்றியே பேசுவார்கள். எம்.ஜி.ஆர் ஐ திட்டிக்கொண்டே இருப்பார்கள், அதனால் நாங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆட்டி படைக்கும் ஆடி வெள்ளி    
July 26, 2010, 4:13 am | தலைப்புப் பக்கம்

ஆடி வெள்ளி என்று இல்லை, இந்த குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்கும் போதும் எல்லாம், நமக்கு உடம்பு ஆட்டம் கண்டு போகுது. பெரிய வேலை ஒன்றும் இல்லைதான். ஆனா அந்த அடுப்பு இருக்கே அடுப்பு.. அது தான் பெரிய பிரச்சனை.எங்களது வீட்டில் கடைக்குட்டி மருமகள் நானே.. வருடாவருடம் யாராவது போன் செய்து அழைப்பார்கள், நைஸ் சாக அவர்களுடன் சேர்ந்து போயி, கோயிலையும், மக்களையும் சுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நவீன் Vs கவிதா    
October 19, 2009, 7:39 am | தலைப்புப் பக்கம்

..எஸ்க்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி.....................நவீன்..: அம்மாஆ..சவுண்டை குறை...கவி :................................... (ignoring him)நவீன் : அம்மாஆஆஆஆஆஆஆ சவுண்டை குறை...கவி: ..................................(ignoring him)நவீன்: அம்மாஆஆஆஆ சவுண்டை 13 ல வை.ம்மாஆ.............கவி: (டிவி வால்யூம் செக் செய்தால், 14 லில் இருந்தது...) ஓ...13 ல் வைக்கனும்மா..இரு.... 14,15,16,17,18, 19, 20, 21.......நவீன் : அம்மாஆஆஆஆஆ...ஆனாஆ....... நெஜமா சொல்றேன்...உனக்கு இருக்கு பாரு திமிரு.......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பப்பு vs கவிதா    
October 15, 2009, 4:07 am | தலைப்புப் பக்கம்

பப்பு : போதும்..கவி : என்ன போதும்...பப்பு : எல்லாமே போதும்..கவி: என்ன எல்லாமே போதும்..பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அம்மாக்களுக்கு ஒரு அம்மாவின் குறிப்புகள்....    
April 22, 2009, 6:08 am | தலைப்புப் பக்கம்

அம்மாவாக ஒரு சின்ன அறிமுகம் செய்துக்குறேன்..! எனக்கு ஒரே மகன் , பெயர் நவீன். அவனை எந்த /யார் உதவியும் இன்றி தனியாக வளர்த்தேன் என்பது என் வாழ்க்கையின் சாதனையாகவே நினைக்கிறேன். மூன்று மாதங்கள் வரை ஆயா துணை இருந்தாலும் அவரின் வயது காரணமாக அவரால் ரொம்பவும் குழந்தையை கவனித்து க்கொள்ள முடியாது. நானே அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதால் என்னை கவனிப்பதில் அவரின் கவனம் இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நின்று போன என் நிச்சயதார்த்தம்    
March 24, 2009, 3:56 am | தலைப்புப் பக்கம்

இந்த காலக்கட்டத்தில் நிச்சயதார்த்தம் இல்லை கல்யாணம் நின்று போவது கூட மிக பெரிய விஷயம் இல்லை. ஆனால் என் குடும்பம் சூழ்நிலை இருந்ததற்கும், குடும்பத்தின் ஒரே ஒரு குலவிளக்கின் நிச்சயதார்த்தம் நின்றது மிக பெரிய விஷயமாக இருந்தது. இதை எழுத காரணம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளால் ஒரு பெண்ணும் அவளின் குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்வதற்கே. எல்லாம் சரிப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

மரவள்ளி கிழங்கில் பலவித உணவுகள்    
March 13, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்

பத்மா'ச் கிட்சன் அப்டேட் செய்து மாதங்கள் ஆகுது. எழுதனும்னு நினைத்து வேறு பதிவுகள் போட்டுக்கொண்டே வர இதை சுத்தமாக மறந்தேவிட்டேன்.மரவள்ளி கிழங்கு - Tapioca இதில் iron, potassium, manganese and copper சத்துகள் உள்ளன. கொழுப்பு குறைவு, உருளைக்கிழங்கை போன்றே இருந்தாலும், இதில் அதைவிட கலோரி குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் நல்ல உணவு. சதைபிடிக்க வேண்டும் என்று விரும்புவோர் இதை உணவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரை பாவாடை (Half Skirt)    
March 9, 2009, 9:24 am | தலைப்புப் பக்கம்

நீ பெண், நீ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி சொல்லி ரொம்பவும் கட்டுப்பாட்டோடு வளர்த்தார்கள். உடை இப்படித்தன் இருக்க வேண்டும். இப்படித்தான் பேசவேண்டும், பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், சிரிக்கவேண்டும் என்று ஒவ்வொன்றும் சொல்லிக்கொடுப்பார்கள். எதையுமே என் இஷ்டத்திற்கு செய்ததாக நினைவில்லை. ஆயாவிற்கு நான் செய்வது தவறு என்று நினைத்தால் போதும் அப்படியே விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்    
February 28, 2009, 7:42 am | தலைப்புப் பக்கம்

தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?அந்த இடத்தை...தொடர்ந்து படிக்கவும் »

கார்டூன் களிப்பு!! :)    
February 27, 2009, 6:53 am | தலைப்புப் பக்கம்

நான் குழந்தையா இருக்கச்சே!! சே!! சே!! ... குழந்தை எல்லாம் இல்லைங்க.. இப்பவும் நான் ரசித்து பார்க்கும் கார்டூன்.. பாட்டு சேனல் இல்லை என்றால் கார்டூன் தான் அதிகம் பார்ப்பது. சீரியல் எல்லாம் பார்த்தால் நான் டென்ஷன் ஆகறது அதிகம்.. எதுக்கு நம்மை பற்றி தெரிந்தே அதை வேறு பார்ப்பது.எனக்கு பிடித்த சில கார்டூன் கதாபாத்திரங்கள் :-1. HEIDI :- என்னை இந்த குழந்தையாக நான் கற்பனை செய்து கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-    
February 26, 2009, 5:57 am | தலைப்புப் பக்கம்

நான் எழுதிய பதிவுகளில் என்னை ஆட்கொண்ட பதிவு இது. மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக… அப்போது மட்டும் இல்லை இப்போதும் இன்றும் என்றும் அறிவா மனதா என்ற என் கேள்விக்கு அர்த்தம் தேட முனையும் போது எல்லாம் இந்த பதிவை நான் எடுத்துப்படிப்பது உண்டு.குறிப்பாக அதில் உள்ள பின்னூட்டங்கள் எனக்கு கொஞ்சம் தெளிவை தந்தாலும் அதிலிருந்தும் ஆயிரமாயிரம் கேள்விகள் ஏழாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மெய்யியல்

ரவுண்டு குட்டிக்கு என் பதில்கள் பத்து..!    
February 22, 2009, 6:06 am | தலைப்புப் பக்கம்

குழந்தை என்னவோ நியாயமான கேள்வி கேட்டு இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள், குட்டீஸ் (சிபி தாத்தா நீங்க இதுல இல்ல) எல்லோரும் என் பதிலையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் என் ரவுண்டுக்குட்டிக்கு என் பதில்கள் இதோ...1. y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken role, chicken puff, etc?அம்மா உனக்கு எத்தனையோ தரம் சொல்லிவிட்டேன்.. வேலைக்கு போறேன்..என்னால் முடிந்த அளவு செய்து தரேன்னு. அதுவும் இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மேனேஜர் vs டேமேஜர்    
February 17, 2009, 8:50 am | தலைப்புப் பக்கம்

மேலாளர் - இவர் எப்படி இருக்கவேண்டும், எப்படி தன்னை ஒரு நல்ல மேலாளராக உருவாக்கிக்கொள்வது, தன்னுடன் பணி புரியும் ஆட்களை எப்படி வேலைவாங்குவது, நடத்துவது, தன்னை மேலும் எப்படி ஒரு நல்ல மேலாளராக மெருகேற்றிக்கொள்வது என்பதை ப்பற்றி நிறைய புத்தங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் பார்த்திருக்கிறேன்.. இதை எல்லாம் படித்தா ஒரு மேலாளர் உருவாகிறார் அல்லது தன் பதவிக்கான தகுதியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மறந்துபோன தமிழ் சொற்கள்    
February 2, 2009, 4:37 pm | தலைப்புப் பக்கம்

சந்தன முல்லை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்ற தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு தொடர் மிகவும் அவசியமானதாக தோன்றுகிறது. இதில் பதிவர்கள் நினைவில் வைத்து சொல்லும் எல்லா சொற்களையும் சேகரித்து சேமித்து வைக்கலாம்.எனக்கு நினைவில் தெரிந்து என்னுடைய தாத்தா நல்ல தமிழ் பேசுவார்கள், ஆயா, அப்பா எல்லாம் அவ்வளவு சுத்த தமிழ் சொற்கள் உபயோகிக்க' வில்லை என்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தனித்துவம் சரியா தவறா?    
January 2, 2009, 3:22 pm | தலைப்புப் பக்கம்

அது ஒரு மழைக்காலம். ஒரு காலை வேலையில், நன்கு பலத்த மழைபெய்து முடிந்து வானம் கலைத்து போய் அமைதியாகி இருந்தது. ஆறுபோல தெருவெங்கும் தண்ணீர் ஓடியது, திண்ணை மறைத்து ஓடியது. குட்டிக்கவிதாவிற்கு படகு விட ஆசை வந்தது.. அதற்குள்ளே அவளை போன்ற குட்டிகள் பேப்பர் படகுகளை விட ஆரம்பித்துவிட்டனர்.வேகவேகமாக நோட்டுபுத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாக கிழித்துக்கொண்டு இருந்தாள் குட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிங்கார நாக நாக நாகவல்லியே...!!    
December 21, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

நாகவல்லிக்கும் எனக்கும் ஏதோ எப்பவும் ஒரு தொடர்பு பந்தம் இருந்துக்கிட்டே இருக்கு. அடிக்கடி பாம்புகளை பார்ப்பது, உள்ளே நடுங்கினாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தைரியமாக கண்ணோடு கண் பார்த்து பேசுவது போன்றவை நடக்கும்.கேரளாவில் இருக்கும் போது இது நடந்தது.. ஆயாவிற்கு போன் செய்து சொல்லுவேன். பெருங்காயம் கரைத்து வீட்டு வாசல் படிகளில் தெளித்துவை, அந்த வாசத்திற்கு பாம்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முகம் பார்க்க வாங்க....:(    
December 13, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

இப்படிப்பட்ட விஷயங்கங்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கு நடக்கவே கூடாது என்று ஆண்கள் முடிவுசெய்ய வேண்டும். கணவன் இறந்தபின் பெண்களுக்கு செய்யும் சம்பரதாயம் என்ற பெயரில் பெண்களுக்கு உறவினர்கள் செய்யும் கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல இயலாது. எங்களது வீட்டில் என்னுடைய சித்தியை (அப்பாவின் தம்பி மனைவி) நான் நினைவு தெரிந்து சித்தப்பா இல்லாமல் தான் பார்த்தேன். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியது..    
December 8, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

குஜராத் நிலநடுக்கும், சுனாமியின் தாக்குதல், இப்போது மும்பாய் தீவரவாதிகளின் தாக்குதல் என்று நாம் எதிர்பார்க்காத எத்தனையோ இழப்புகள். இதில் குழந்தைகள் அதிகமாகி பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நெருங்கிய சொந்தங்களை இழந்த கொடுமைகள். யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையில் தான் ஒவ்வொருவரும் இப்போது இருக்கிறோம். நாம் நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீங்க கவிதா தானே....?!!    
December 5, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

சொந்த ஊருக்கு சென்று வந்தாலே ஒரு சொல்லமுடியாத சந்தோஷம், அதுவும் பள்ளிக்கூடம், தோழிகளுடன் பேசிக்கொண்டு நடந்த தெருக்கள், எங்களின் வீடு..என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அண்ணன் இன்னமும் எங்களுது வீட்டில் இருந்தாலும், இப்போது இருக்கும் வீடு கொத்தி கூறுபோட்டுவிட்ட வீடு. பெரியவர்கள் இறந்தபிறகு, சிறுசுகள் தனக்கு கொடுக்கப்பட்ட பாகத்தை தனக்கு தகுந்ததாக மாற்றிக்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!    
November 29, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

வேளச்சேரியில் வீடுகள் அதிகமாக அதிகமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போகிறது. பற்றாக்குறைக்கு ஏரியை உடைத்து விடுகிறார்கள். படங்கள் சில, பத்து வருடங்களில் முதன் முறையாக எங்கள் தெருவில் படகு வந்தது. ஒருவருவருக்கு ரூ.10/-,இன்னமும் ஆட்டோ நிறுத்தத்தில் படகுகள் நிற்கின்றன. உங்களுக்கும் படகு பயணம் போகனுமா வாங்க ஏ.ஜி.எஸ் காலணி, மேற்கு...தொடர்ந்து படிக்கவும் »

மெத்தப்படித்த ஐடி மக்கள்........    
November 18, 2008, 4:18 pm | தலைப்புப் பக்கம்

பி.ஈ. சிவில், பி.ஈ.மெக்கானிகல், பி.ஈ.எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ், மற்றும் தனி பாடபிரிவுகள் வேதியியல், இயற்பியல், கணிதம் இன்னமும் சம்பந்தமே இல்லாத பிரிவுகளில் படித்துவிட்டு, இன்று ஐ.டி துறையில் வேலைப்பார்த்துவரும் மெத்த படித்த இளைஞர்கள்/இளைஞிகளுக்கு நிச்சயமாக தன் எதிர்காலத்தை பற்றியோ, நாட்டின் எதிர்காலத்தை பற்றியோ அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.படித்தது ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கேழ்வரகு அடை & புட்டு    
October 3, 2008, 8:02 am | தலைப்புப் பக்கம்

கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!! தேவையான பொருட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..    
September 28, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..    
April 19, 2008, 4:43 am | தலைப்புப் பக்கம்

சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை