மாற்று! » பதிவர்கள்

கயல்விழி முத்துலெட்சுமி

தமிழ் அகராதி, தமிழ் ரீடர்    
April 18, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அவ்வை தமிழ்சங்கம்    
April 15, 2008, 11:58 am | தலைப்புப் பக்கம்

தில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.தினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்..அதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம் தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி    
April 12, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு பாடலோ ஒலியோ நீங்கள் கணினியில் கேட்பதை அப்படியே பதிவு செய்து எம்பித்ரி ஃபார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.. அதற்கு நல்ல தொரு சாப்ட்வேர் mp3mymp3 2.0 சர்வேசனின் ஜனகணமண பாடல் பாடவாங்க என்ற அழைப்பின் பதிவில் அவர் இந்த சாப்ட்வேர் பற்றி சொல்லி இருந்தார். அதன்பிறகு கொஞ்சநாட்கள் வெறுமே பாட்டை பாடி அப்படியே எம்பித்ரி ஃபார்மட்டில் சேமிக்கசெய்ய மட்டுமே பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை அனுபவம்

தீக்குள் விரலை வைத்தால் ..    
April 7, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

நான் உள்ளே நுழையும் நேரம் அந்த பெண் பாடிக்கொண்டிருந்தாள். நிறம், நல்ல தென்னிந்திய நிறம். மை இடப்படமாலே பெரியதாக தெரியும் வகையான கண்கள். நான் அமர்வதற்கு நல்ல அமைப்பான இடம் தேடிக்கொண்டிருந்தேன். தூணுக்கருகில் பாடகர்களை நன்றாக கவனிக்கும்படியாக நேர் பார்வையில் அதே சமயம் காற்றும் வெளிச்சமும் ஒரு சேர கிடைக்கும் படி ஒரு இடம் கண்களில் பட்டது. அமர்ந்த சில நொடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் கதை

யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!    
April 3, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்

கதைகள், கதைகள் தானென்றாலும் சில நேரம் உண்மையாகவே எழுத்துக்கள் எழுந்து வந்து கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடமாடவும் வைத்து , அதுவும் துன்பமயமான அந்த கதாப்பாத்திரத்தின் ஆழமானதொரு வலியை நாம் உணரும்படி செய்தால் அது கதைதானா என்று அறியாமை மயக்கமே வருகிறது ... பார்த்திராத கதாப்பாத்திரங்கள் நம் கூடவே சில நாட்களுக்கு உலவிக்கொண்டிக்கிறார்கள்.கே.ஏ.அப்பாஸ் கதைகள் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வட்டத்துக்குள் வானம்    
March 14, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

மார்ச் மாத போட்டிக்கு பிரதிபலிப்புன்னு சொன்னதும் என்ன படம் எப்படி எடுக்கறதுன்னு ரொம்ப யோசனை செய்யவே இல்லை.. ஏகப்பட்ட வேலை அப்பறமா யோசிக்கலாம் அப்பறமா யோசிக்கலாம்ன்னு தள்ளிப்போட்டே நாட்கள் ஓடிடிச்சு.. கடைசியில் எப்படியும் எடுத்தே ஆகவேண்டிய நாள் வந்ததும் பிரதிபலிப்புன்னா நினைவுக்கு வந்தது அடுப்படியில் பாத்திரம் பிரதிபலிக்கறது தான்.. சரிதான் அதுலயே இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வண்ணத்தமிழ் வளரப்படி    
March 10, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்றுஇரண்டு முகத்தில் கண் இரண்டுமூன்று முக்காலிக்குக் கால் மூன்றுநான்கு நாற்காலிக்குக் கால் நான்குஐந்த் ஒருகை விரல் ஐந்துஆறு ஈயின் கால் ஆறுஏழு வாரத்தின் நாள் ஏழுஎட்டு சிலந்தியின் கால் எட்டுஒன்பது தானியம் வகை ஒன்பதுபத்து இருகை விரல் பத்து.இந்த ஒரு பாட்டு தான் நான் படித்து எனக்கு நினைவுக்கு வருவது..----------------------------------------------------------------------------ஆத்திச்சூடி -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

காட்சி மாற்றம்    
March 5, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்

சுழல்காற்றில் சுற்றியடித்தநினைவுகளின் பிடியில் சுற்றிசோர்ந்து விழும் மனம்.ரகசியங்கள் தொலைத்துவிட,தொலைந்துவிடசந்தர்ப்பங்கள் தேடி அழும் மனம்.மறதி வரம் கேட்டுமன்றாடி மயங்கி நிற்கும் மனம்.இரவு மறைந்து விடியல் போலகாட்சி மாறும்...நினைவடுக்கை தூசிதட்டிதுளிர்க்குமதே மனம்.ரகசியங்கள் குவித்து வைத்துரசித்திருக்குமதே மனம்.நினைவலையில் கால் நனைத்துமகிழ்ந்தபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்    
March 4, 2008, 4:29 am | தலைப்புப் பக்கம்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

புனுகீஸ்வரர் கோயில்    
February 28, 2008, 12:33 pm | தலைப்புப் பக்கம்

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒரு கை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி.. ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..(...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் அனுபவம்

தமிழிசை விருந்து    
February 18, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

ஞாயிறு அன்று தில்லி தமிழ் சங்கத்தில் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் தமிழ்சங்கம் இணைந்து நடத்திய தமிழிசை நிகழ்ச்சி இருந்தது. சரி பத்து மணியிலிருந்து எட்டு மணிவரை இருக்கிறது . மகளை வகுப்பில் விட்டுவிட்டு பதினோறு மணியிலிருந்து கொஞ்சம் கேட்டுவரலாம் என்று சென்று இருந்தோம். பதினோரு மணிக்கு மன்றத்தலைவர் ராமதாஸ் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்ச்சிகள்

சூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி    
February 13, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

தில்லி வந்து வருடம் பத்தாகப்போகிறது இருந்தும் இந்த சூரஜ்குண்ட் மேளாவை பார்த்ததில்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே இந்த வருடம் எப்படியும் செல்வதுஎன்று சபதம் எடுத்திருந்தேன். தில்லியில் இருந்து 25 கிமீ தொலைவில் ஃபரிதாபாத் அருகில் இருக்கும் சூரஜ்குண்ட் என்னும் இடத்தில் வருடா வருடம் கைவினைக்கலைஞர்கள் தங்கள் கலைப்பொருட்களை கண்காட்சி விற்பனைக்கு வைக்கும் மேளா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வட்டம் - மணிகள்    
February 8, 2008, 6:08 am | தலைப்புப் பக்கம்

ஜிம்ப் தரவிறக்கி சுத்தியும் கட்டம் கட்டிய முதல் புகைப்படம் இது. புது ட்ரைப்பாட் வைத்து எடுக்கப்பட்டு போட்டிக்கு அனுப்பும் முதல் படமும் இதுவே தான்.இன்னும் ரிஃப்ளக்டர் எல்லாம் வைத்து எடுத்த முயற்சியும் கூட இந்த படத்தில் முதல் முதல் என்று நிறைய சிறப்பம்சம் இருக்கின்றது. ஸ்டூடியோ செட்டப் கூட சென்றமாத தொலைபேசிக்கான ஸ்டூடியோ செட்டப்பை விட முன்னேறிய வகையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி