மாற்று! » பதிவர்கள்

கப்பி பய

Wanted    
June 29, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன் - வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு. 3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)    
June 28, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிறுவர்களின் உலகம் - 3 (Born Into Brothels)    
May 28, 2008, 12:11 am | தலைப்புப் பக்கம்

சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்தான புரிதலை அவர்களின் குடும்பமும் சமூகச் சூழ்நிலையும் சிறுவயதிலேயே ஏற்படுத்திவிடுகின்றன. சமூகம் அவர்களைக் கண்டும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொள்கிறது. புறக்கணிப்புகளும் ஏமாற்றங்களுமே வாழ்வாகிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிரிக்கெட் - IPL - T20    
May 27, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

கொலராடோ பயணம் - சில குறிப்புகளும் புகைப்படங்களும்    
May 12, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

"அப்பா இந்த கட்டிடத்தைப் பாருங்க""அப்பா அந்த மலையைப் பாருங்க. அதுக்கு பேர் என்ன?""ஹையா பக்கத்துல டிரெயின் எவ்வளவு வேகமா போகுது""அந்த கட்டிடம் என்னோட ஸ்கூல் மாதிரியே இருக்குல்ல?""இனி வாரவாரம் என்னை டிரெயின்ல கூட்டிட்டு வருவீங்களா?""இங்கயே இறங்கனுமா? ஏன் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமே? ஓ இதுதான் கடைசி ஸ்டேஷனா?"பக்கத்து இருக்கையில் தன் தந்தையுடன் பயணம் செய்துகொண்டிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

சிறுவர்களின் உலகம் - 2 (Pan's Labyrinth)    
April 30, 2008, 10:38 pm | தலைப்புப் பக்கம்

El Laberinto del Fauno (Pan's Labyrinth)சிறுவர்களின் உலகம் கற்பனைகளாலும் கதைகளாலும் நிறைந்தது. உறக்கத்திலும் கூட கனவோடு கதைத்தபடி உறங்குகிறார்கள். சிறுவர்கள் விளையாடும்போது அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள் தானே? ஒவ்வொருவரும் ஏதாவதொரு கதையை சொன்னபடிதான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த கதைகளைக் கேட்கும் நிதானமோ அல்லது புரிந்துகொள்ளும் மனப்பக்குவமோ நம்மில் பெரும்பாலானோர்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அம்மாவின் புகைப்படம்    
February 22, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

அம்மாவின் அந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அழுக்கேறியிருந்தது. முன் எப்போதோ ஏதோவொரு பண்டிகை நாளில் வைக்கப்பட்ட சந்தனத்தின் கறை சட்டங்களில் படிந்திருந்தது. அந்த புகைப்படத்தை எடுத்தபோது அவளுக்கு வயது 22. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படம். அட்டையில் வரையப்பட்ட நீல வானத்தின் முன் நின்றுகொண்டிருப்பாள். அருகில் ஒரு மேடையில் பூச்செடி வைக்கப்பட்டிருக்கும். ப்ளாஸ்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புரட்சி நாயகன் சாம் ஆண்டர்சன்    
February 10, 2008, 2:42 am | தலைப்புப் பக்கம்

சரித்திர நாயகன்புர்ர்ர்ரட்சி புதல்வன்டர்ரு டான்ஸர்ஏழரையாவது அதிசயம்சோதனை நாயகன்நடன சூறாவ'லி'வருங்கால அமெரிக்க ஜனாதிபதிசாம் ஆண்டர்சன் நடித்த 'யாருக்கு யாரோ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு கன்னாபின்னாவென ஓடி சாதனைகளை முறியடித்து வெள்ளி விழா கண்டு சரித்திரம் படைக்க வாழ்த்துகிறோம்!!!படத்திலிருந்து எக்ஸ்க்ளூசிவ் பாடல் காட்சிகள்:சாம் ஆண்டர்சன் ஓர்குட் குழுமம் -...தொடர்ந்து படிக்கவும் »

House of Sand and Fog    
January 28, 2008, 11:57 pm | தலைப்புப் பக்கம்

வாழ்ந்து கெட்டவனின்பரம்பரை வீட்டைவிலை முடிக்கும்போதுஉற்றுக்கேள்கொல்லையில்சன்னமாக எழும்பெண்களின் விசும்பலை- மகுடேஸ்வரன்பாலுமகேந்திராவின் 'வீடு' பார்த்திருக்கிறீர்கள் தானே? 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதையை மிகச் சிறப்பாக படமாக்கியிருப்பார். 'House Of Sand and Fog' படத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் மகுடேஸ்வரனின் இந்த கவிதையும் பாலுமகேந்திராவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Juno    
January 25, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படம், இயக்குனர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் Juno. ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலைப் பார்த்த பின்தான் இப்படியொரு படம் வந்திருக்கிறதென்றே தெரிந்தது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்க ஆரம்பித்து படம் முடியும்போது நல்ல படம் ஒன்றை பார்த்த திருப்தியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

One Hundred Years of Solitude    
January 14, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

Love in the time of Cholera, Of Love and Other Demons நாவல்களை வாசித்த நாட்களிலிருந்தே மார்க்வெஸ்ஸின் One Hundred Years of Solitude (நூற்றாண்டு காலத் தனிமை) நாவலை தேடிக்கொண்டிருந்தேன். இந்த இரு நாவல்களும், இணையத்தில் படித்திருந்த மார்க்வெஸ்ஸின் கட்டுரைகளும், நூற்றாண்டு கால தனிமை நாவல் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்த நாவலின் மேல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. சென்னையில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Bucket List    
January 9, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Little Miss Sunshine    
December 12, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

தோல்வியடைந்தவர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே நம்மை பாதிக்கின்றன. கதாபாத்திரம் தோற்றுப்போவதாகக் காட்டும் திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கலங்கச் செய்கின்றன. அந்த தோல்வியிலிருந்து மீண்டு போராடி வெல்லும் கதாபாத்திரங்கள் மனநிறைவைத் தருகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Casablanca    
November 28, 2007, 2:40 am | தலைப்புப் பக்கம்

பட்டையைக் கிளப்பும் வசனங்கள், ஹம்ஃப்ரீ போகார்ட்டின்(Humphrey Bogart) நடிப்பு-வசன உச்சரிப்பு, இங்ரிட் பெர்க்மெனின் (Ingrid Bergman) அழகு, இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Anukokunda Oka Roju    
November 22, 2007, 12:39 am | தலைப்புப் பக்கம்

ஒரு நாள் முழுக்க என்ன நடந்ததென்றே தெரியாமல் அனைத்தும் மறந்துபோனால் எப்படியிருக்கும்? அன்று நமக்கு என்ன நேர்ந்தது, என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதெல்லாம் பெரும் புதிராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

One Flew Over the Cuckoo's Nest    
November 18, 2007, 10:27 pm | தலைப்புப் பக்கம்

ஒரு திரைப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் பார்ப்பவரிடத்தில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு நிலைக்குமேயானால் அது மிகச் சிறந்த திரைப்படமாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Eternal Sunshine of the Spotless Mind    
October 26, 2007, 7:29 am | தலைப்புப் பக்கம்

நீரைப் போல்நினைவுகளைப் போல்சில நிமிடங்களையும்தேக்கிக் கொள்ள முடிந்தால்......பருவங்களைப் போன்றேசில தருணங்களும்மீண்டும் வரக்கூடுமென்றால்...வாழ்வதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

12 Angry Men    
October 2, 2007, 2:59 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.ஒரு ஸ்பானிய இளைஞன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அம்முவாகிய நான்    
September 12, 2007, 9:56 am | தலைப்புப் பக்கம்

இயக்குனர் பத்மாமகன் பாணியில் சொன்னால் அம்மு என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை திரைப்படமாக மொழிமாற்றும் முயற்சிதான் 'அம்முவாகிய நான்' திரைப்படத்தின் ஒன்லைன். வழக்கமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்