மாற்று! » பதிவர்கள்

என். சொக்கன்

சில்லறை    
June 18, 2010, 1:52 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன். தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எட்டு வருஷ அனுபவம்    
November 9, 2009, 10:56 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’ அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ஏதாச்சும் ரெண்டு மிருகம்    
August 3, 2009, 12:50 pm | தலைப்புப் பக்கம்

வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை. ‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’ ‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’ ‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’ ’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள். எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஸ்ரீரங்கப்பட்டினம்    
July 20, 2009, 6:46 am | தலைப்புப் பக்கம்

அபூர்வமாக, சென்ற வார இறுதியில் எழுத்து வேலைகள் எவையும் இல்லை. சரி, சும்மா ஒரு சுற்றுலா சென்று வரலாமே என்று கிளம்பினோம். சுற்றுலா என்று கிளம்பிவிட்டால், அடுத்து, அடுத்து என்று ஒரே நாளில் இருபது, முப்பது இடங்களைப் பார்க்கிற பரபரப்பு எனக்கு ஆகாது. இப்படி ஆளாளுக்கு மற்றவரை அவசரப்படுத்தி, எரிச்சல்படுத்திக் கோபப்படுத்தி முறைத்துக்கொண்டு ‘உல்லாசப் பயணம்’ போவதற்குப் பதில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை    
June 23, 2009, 7:29 am | தலைப்புப் பக்கம்

போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள். ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கல்வி

இன்னொரு மீன்    
June 5, 2009, 1:01 pm | தலைப்புப் பக்கம்

’ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார். உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒற்றை மீன்    
June 3, 2009, 11:28 am | தலைப்புப் பக்கம்

போன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது. என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது. அரை விநாடியில், வந்திருப்பது யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அல்வாத் துண்டு    
March 9, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும். இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தொடர்?    
February 28, 2009, 6:12 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்: ‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’ அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிம்ம வம்சம்    
February 28, 2009, 5:43 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள். தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான். விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இசை எனும் கலை    
February 8, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி. நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன. ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பார்வையிடல்    
February 5, 2009, 3:55 am | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்: அன்புடையீர், உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம். இப்படிக்கு, பள்ளி நிர்வாகத்தினர் நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ஊர்ந்து போகும் தேரு    
January 17, 2009, 8:50 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள். கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு தகவல்    
January 4, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்குமுன், இந்திய வங்கி ஒன்றுடன் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம். இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

சென்னை புத்தகக் கண்காட்சி 2009: இது புதுசு    
December 22, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் (2009) சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி எனது நான்கு புத்தகங்கள் வெளியாகின்றன, அவைபற்றிய சிறுகுறிப்புகள் இங்கே: 1. எனக்கு வேலை கிடைக்குமா?   குங்குமம் இதழில் எட்டு வாரங்கள் ‘லட்சத்தில் ஒருவர்’ என்ற பெயரில் வெளியான தொடரின் விரிவான புத்தக வடிவம். ‘லட்சத்தில் ஒருவர்’ தொடர், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதியவர் வேலை பெறுவதற்கான சில வழிகளைமட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்