மாற்று! » பதிவர்கள்

ஆர். முத்துக்குமார்

இவர்தான் ராஜபக்‌ஷே!    
February 13, 2009, 11:55 am | தலைப்புப் பக்கம்

பகுப்புகள்: ஈழம் சித்திரம்

நாமலிங்க ராஜூ - மோசடியின் முழுப்பின்னணி!    
January 10, 2009, 8:17 am | தலைப்புப் பக்கம்

வெலவெலத்துப் போயிருக்கிறது மென்பொருள் துறை. ஐயாயிரத்து சொச்சம் கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் நிறுவனத்தின் நிஜமான கையிருப்பு வெறும் 320 கோடி மட்டுமே என்ற ரகசியம் சமீபத்தில் அம்பலமாகி உள்ளது. அதுவும் நிறுவனத்தின் தலைவரான ராமலிங்க ராஜுவின் வாக்குமூலமாக.ஆமாம். கணக்கு வழக்குக் குறிப்பேட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒபாமாவுக்கு வந்த நேரம்!    
December 18, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் டைம் இதழ் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக பராக் ஒபாமாவை தேர்வு செய்துள்ளது. இதழின் முகப்பில்லும் ஒபாமாவுக்கு இடம் கொடுத்துள்ளது. இந்த சமயத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். சிகாகோவின் தெற்குப் பகுதி (Southside). பல்வேறு இனங்களையும் பல்வேறு குழுக்களையும் தன்னுள் அடக்கிய பகுதி. கொஞ்சம் விவகாரமான பகுதியும்கூட. ஒரு காலத்தில் இரும்பு மில்கள் அதிகம் இருந்த பகுதி அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ராஜாஜியின் ரசனை!    
December 10, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

துளியும் ரசிக்கவில்லை ராஜாஜி. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசங்களை உடைத்தெறிந்துவிட்டு உறுப்பினர்கள் தமது சொந்தத் தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்துப்பேசிக் கொண்டிருந்தது அவரை சூடேற்றியிருந்தது. முகம் சிவந்துகொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் பதிலளிப்பதற்காக எழுந்தார் ராஜாஜி.‘உறுப்பினர்கள் தொகுதிகளைப் பற்றி நிறையவே பேசினார்கள். அவர்களுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஈழமும் வி.பி.சிங்கும்    
November 29, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் வி.பி. சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். இந்திய அமைதி காக்கும் படை (IPKF) என்ற பெயரில் ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது.உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931 பிறந்த விஸ்வநாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இந்திரா - முக்திபாஹினி - பங்களாதேஷ்    
November 19, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

பிரிவினை கோஷம் எழாத தேசத்தை உலக வரைபடத்தில் தேடுவது அத்தனை சிரமமான விஷயம். பாகிஸ்தானும் அப்படித்தான். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்ற புதிய தேசம் உருவான நொடியில் இருந்தே கிழக்கு பாகிஸ்தானில் பிரிவினை கோஷம் எதிரொலித்துக்கொண்டுதான் இருந்தது.கலவரம். பேரணி. பொதுக்கூட்டம். மறியல். ஊர்வலம். எல்லாம் நடக்கும். அடிக்கடி நடக்கும். அவ்வப்போது சிறிய அளவில்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹர்கிஷன்சிங் சுர்ஜித்    
August 6, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

எழுபத்தைந்து ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஒருகாலத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட மாணவன் என்றால் நம்பமுடிகிறதா? மாவீரன் பகத் சிங்கின் பேச்சிலும் செயலிலும் மயங்கிப்போன சுர்ஜித், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே சுதந்தரப்போராட்டத்தில் குதித்துவிட்டார்.பஞ்சாபில் நடந்த போராட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வணிகர் சங்கத் தலைவர் ரஜினி    
August 3, 2008, 5:40 pm | தலைப்புப் பக்கம்

மன்னிப்பு கேட்டார் என்கிறார்கள். இல்லை. கேட்கவே இல்லை என்கிறார்கள். திராவிட பாணியில் வெறுமனே வருத்தம் தெரிவித்தார் என்கிறார்கள். இறுதியாக, ‘வன்முறை செய்பவர்களை உதைக்கவேண்டாமா? என்று பொத்தாம் பொதுவாகப் பேசியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை வந்திருக்காது’ என்று கூறி பூனைக்குட்டியை வெளியே விட்டிருக்கிறார் ரஜினி. நல்லது. இந்த இடத்தில், ‘நான் யோசிக்காம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்