மாற்று! » பதிவர்கள்

அ.ராமசாமி எழுத்துகள்

பாலா: அழிப்புக் கடவுளின் ஆதரவாளன்    
March 22, 2009, 2:50 pm | தலைப்புப் பக்கம்

தனி அடையாளம் கொண்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களைக் கவனத்திற்குரிய படமாக ஆக்குவதற்குப் பலவிதமான உத்திகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதைச் சாதாரணப் பார்வையாளர்கள் அறிவதில்லை. அவர்கள் ஒரு சினிமாவை அதன் எல்லைக்குள் நின்று பார்த்துவிட்டு அது தந்த களிப்பையும் கொண்டாட்டத்தையும் அந்த அரங்கிலேயே விட்டு விட்டுச் சென்று விடவே செய்கின்றனர். அப்படிப் பட்டவர்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை    
September 17, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிகளை போதுமான அளவில் செவ்வனே செய்யும் போது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது. மக்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பண்பட்ட அரசியல் உதவும்.உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் பணியைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்இந்தியாவில் ஆசிரியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்    
August 23, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

மதிப்பிழக்கும் உயர் ஆய்வுகள்    
August 23, 2008, 1:12 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களாகிய நமது தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் முன்னிலை வகிப்பவை எவை எனப் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படிப் பட்ட புள்ளி விவரங்கள் தேவை என்ற எண்ணம் கூடப் பெரும்பாலான தனிநபர்களிடம் இருப்பதில்லை. தனிநபர்களுக்கு இருப்பதில்லை என்பது பெரிய குறையாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி