மாற்று! » பதிவர்கள்

அழகியசிங்கர்

எதையாவது சொல்லட்டுமா / 15    
January 12, 2010, 5:00 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 5 புத்தகங்கள் விருட்சம் வெளியீடாக வந்துள்ளன. இந்தப் புத்தகங்கள் கொண்டு வந்த வேகத்தில் விருட்சம் உரிய நேரத்தில் கொண்டு வர முடியவில்லை. காரணம் இடம் மாற்றம். நான் என்னை சரி செய்து கொண்டுவிட்டேன். இதோ விருட்சம் முதல்வாரம் பிப்பரவரி மாதம் வந்து விடும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை நவீன விருட்சம் இதழை இன்னும் சீக்கிரம் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான், பிரமிள், விசிறி சாமியார்........1    
June 26, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பிரிவும் மரணமும்    
February 2, 2009, 5:08 pm | தலைப்புப் பக்கம்

என் நண்பர் நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன். நாமெல்லாம் ஏதோ வேலைக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உயிர்    
February 2, 2009, 3:18 pm | தலைப்புப் பக்கம்

"உனக்கு எப்பொழுது உயிர் வரும்?" என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன். "உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?""உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்.""இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி    
January 19, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை...தொடர்ந்து படிக்கவும் »

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2    
January 12, 2009, 5:34 pm | தலைப்புப் பக்கம்

ஆரம்பகாலம் முதல் எனக்கும் புத்தகக் காட்சிக்கும் தொடர்பு உண்டு. அப்போது புத்தகங்களை சாக்கு மூட்டையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒவ்வொரு கடையாகப் பார்த்து என் புத்தகங்களைக் கொடுத்துவிட்டுப் போவேன். ஒருமுறை நகுலனின் இருநீண்ட கவிதைத் தொகுதியையும். உமாபதியின் வெளியிலிருந்து வந்தவன் தொகுதியையும் அன்னம் கடையில் கொடுத்திருந்தேன். அந்த முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்    
January 10, 2009, 12:18 am | தலைப்புப் பக்கம்

ஜனவரி மாதத்திலிருந்து என் பரபரப்பு அதிகமாகிவிட்டது. நான் நினைத்தபடியே மூன்று புத்தகங்கள் கொண்டு வர எண்ணினேன். கடைசி நிமிடம் வரை பணம் ஒரு பிரச்சினையாக இருக்கும்போல் தோன்றியது. ஆனால் ஓரளவு Festival Advance பணமும், Medical Aid பணமும் என்னைக் காப்பாற்றி விட்டது.நான் எதிர்பார்த்தபடி 3 புத்தகங்களும் நல்லமுறையில் பிரசுரமாகிவிட்டன. இந்த முறை திருப்திகரமாக 3 புத்தகங்களும் அமைந்துவிட்டன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சியாட்டில் விற்ற நிலம்    
September 24, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்கா பல்வேறு பூகோளப் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் நாடாதலால் அதன் மாநிலங்கள் நகரங்கள் ஆகியவற்றிற்கு தங்கள் சொந்த நாட்டின் இடப் பெயர்களைக் குடியேறியவர்கள் சூட்டினர். மேரிலாண்ட், நியு ஹாம்ஷையர், நியுயார்க் போன்ற ஆங்கிலப் பெயர்கள்; லூசியானா, வெர்மான்ட் போன்ற பிரெஞ்சுப் பெயர்கள்;மான்டானா, ப்ளோரிடா போன்ற ஸ்பானிஷ் பெயர்கள்; இவை தவிர இண்டியானா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

நூலகங்களின் தேவை    
September 17, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின்...தொடர்ந்து படிக்கவும் »

வார்ஸாவில் ஒரு கடவுள்/1    
September 14, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களாக நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் படிப்பதில்லை. எனக்கு நேரம் கிடைப்பதில்லை. காலை 7.30மணிக்குக் கிளம்பினால் வீடு வர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. நான் எப்போதும் மின்சார வண்டியில் பயணம் செய்யும்போதுதான் தினமணி, The Times of India பத்திரிகைகளைப் படிக்கிறேன். அதனால் நான் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகளை வாங்குவதை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் Non Fiction ஐ விரும்பிப் படிக்கிறேன். The Other...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தசாவதாரம்    
June 22, 2008, 9:16 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தக தினம்    
June 14, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

அழகியசிங்கர் இன்று உலகப் புத்தக தினம் எல்லாக் குப்பைகளையும் தூக்கி தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள் என் புத்தகங்களைப் பார்த்துமலைத்து நின்றாள் என்ன செய்வதென்று அறியாமல் பின் ஆத்திரத்துடன் தெருவில் வீசியெறிந்தாள்போவார் வருவார் காலிடறபுத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது அதிலுள்ள வரிகள் எல்லார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விருட்சம் 80வது இதழ்    
June 14, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்.இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருவனந்தபுரம்    
June 6, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரமிள்    
June 2, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில் உள்ள கரடிக்குடி என்ற இடத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், பிரமிள் அனுதாபி. தமிழ் இலக்கியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்