மாற்று! » பதிவர்கள்

அருண்

மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்    
January 20, 2009, 12:40 pm | தலைப்புப் பக்கம்

போரோமியன் வளையங்கள் என்று கணக்கில், நாட் தியரியில் (knot theory) ஒரு விஷயம் உள்ளது. மூன்று வளையங்களை ஒன்றோடு ஒன்று படத்தில் உள்ளது போல் சேர்த்தால் கிடைப்பது போரோமியன் வளையங்கள். விசேஷம் என்னவென்றால், இரண்டிரண்டாக பார்க்கையில் வளையங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தனித்தனியே இருக்கும். சுலபமாக பிரித்து எடுத்துவிடலாம். படத்தில் உள்ளது போல மூன்றாக, முடிச்சாக, சேர்த்து பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் ஆன்மீகம்

எர்டாஸ் எண்ணும் ஆறுகட்ட பிரிவும்    
October 19, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

ஆறு கட்ட பிரிவு - விக்கிப்பீடியா படம் சிக்ஸ் டிகிரீஸ் ஆஃப் செபரேஷண் (ஆறு கட்ட பிரிவு) என்று ஒரு கருத்து உள்ளது. நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த கருத்துப்படி தோராயமாக உலகில் உங்களுக்கு தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு, தெரிந்தவருக்கு தெரிந்தவருக்கு என்னை தெரிந்திருக்கும். முன்பின் சந்தித்திராத உங்களையும் என்னையும் - நாம் உலகில் எந்த இருவராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உங்கள் க்யூ எழுத்து எப்படி    
April 27, 2008, 2:56 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் மற்றவர் கவனிப்பை விரும்புபவரா இல்லை குடத்தில் இட்ட விளக்கா? இதை எளிதான ஒரு சோதனை மூலம் சொல்லமுடியும் என்கிறார் சைகாலஜி பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். சமீபத்தில் அவர் எழுதிய க்விர்காலஜி (Quirkology) என்கிற புத்தகத்தில் எப்படி என்று ஒரு ஜாலி சோதனை மூலம் விளக்குகிறார். ஆனால், கவனிப்பை விரும்புவதால் நீங்கள் குழந்தையா, இல்லை, குடம் கோபுர உச்சியில் இருக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மேகத்தின் கனம் என்ன    
April 24, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

காளிதாசரின் மேகதூதத்திலிருந்து முன்னொருகாலத்தில் காதலர்கள் தூதுவிட மேகத்தை உபயோகித்தாக தெரிகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இதே மேகம் காதலர்களால் பட்டபாட்டில் முத்துசாமி தீக்ஷதர் வர்ஷய வர்ஷய வர்ஷய என்று பாடியதும் கதறிக் கொண்டு மழையை பொழிந்ததாம், கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்காலங்களில் மேகத்திற்கும் நமக்கும் உறவுமுறை அவ்வளவு சுகிர்தமாக இல்லை. பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்