மாற்று! » பதிவர்கள்

அருண் நரசிம்மன்

நானோ ப்லூயிட்ஸ்    
April 1, 2009, 12:02 pm | தலைப்புப் பக்கம்

வலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம். நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒப்புமைக்காக பார்த்தால், ஒரு அனுவின் அளவு ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் ஆயிரம் கோடி பாகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

காளான் பீரங்கி    
February 24, 2009, 7:09 pm | தலைப்புப் பக்கம்

சிறு வயதில் நம்மில் சிலர் குப்பைமேட்டிலும், புதர்களிலும் மழைவிட்டதும் சட்டென்று தோன்றும் நாய்க்கொடைகளை பார்த்திருக்கிறோம். பறித்து, குடையின் பின்புறம் தடவியும் இருக்கிறோம் (வழு வழுவென்று இருக்கும்). சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சுவைத்தும் இருக்கிறோம் (உவ்வேக், இதற்கு தாமரை செண்டே தேவலாம்டா). இவ்வகை காளான்கள் மாட்டு சானத்திலிருந்து மயிலை தெப்பகுளம் வரை பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கோரோட் எக்ஸோ ஏழு பி பட்டறை    
February 12, 2009, 2:30 am | தலைப்புப் பக்கம்

உலகின் மிகப்பெரிய பாம்பு பற்றி படித்தோம். அண்டத்தில் நமக்கு தெரிந்த மிகச்சிறிய உலகம் (கிரகம், கோளம்) எது தெரியுமா. கோரோட் எக்ஸோ ஏழு பி என்று பெயர். நிஜமாகவே சுடச் சுடச் (மேற்பரப்பின் வெப்பம் ஆயிரம் டிகிரிக்கும் மேலாம்) ஒரு வாரம் முன்னர்தான் (Feb 3, 2009) பிரஞ்சு வானவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் [1]. CoRoT-Exo-7b பெயர் காரணம் உண்டு. CoRoT என்பது பூமியை சுற்றிவரும் ஒரு தொலைநோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இந்த நாஸாவின் படத்தில் என்ன தவறு?    
February 4, 2009, 3:24 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள அட்லாண்டிஸ் எனும் நாஸா விண்வெளி ஊர்த்தியிலுள்ள (space shuttle) ஓட்டுநர் அறையின் (cockpit) புகைப்படத்தை பாருங்கள். படம் மார்ச் 2000த்தில் நாஸாவின் வலைத்தளத்தில் வெளியானது. இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்தவுடன் சட்டென்று உங்களால் கூற முடியுமா? ஓட்டுநர் அறையில் பளீரென்று விளக்குகள் எரிகிறது. அப்படியெனில் படம் பிடித்த காமிரா மிகத்துரிதமாக திறந்துமூடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கா கா பா பா டா டா    
February 1, 2009, 2:41 am | தலைப்புப் பக்கம்

ஞாயிறை முன்னிட்டு ஒரு சிறிய, மென்மை அறிவியல் பதிவு. கீழே உள்ள வீடியோவை பார்த்துக்கொண்டே கேளுங்கள். சில நொடிகளே பிடிக்கும். செய்துவிட்டீர்களா? இப்போது கண்ணை மூடிக்கொண்டு, வீடியோவை ஓடவிட்டு மீண்டும் என்ன கேட்கிறீர்கள் என்று பாருங்கள். [யூடியூப் சுட்டி] கேள்வி இதுதான்: வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்டபோதும், பார்க்காமல் கேட்டபோதும், அதில் தோன்றுபவர் என்ன உச்சரித்தார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மகுடி இசையும் பாம்புச் செவியும்    
January 29, 2009, 2:33 pm | தலைப்புப் பக்கம்

மகுடி இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உருளைகிழங்கு வறுவல் வடிவியல்    
January 27, 2009, 11:29 am | தலைப்புப் பக்கம்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று தாடியுடன் மனச்சைக்கிள் ஏறி (ஏன் எப்போதும் ராஜா காலத்து மனக்குதிரை, அதனால் தான் சைக்கிள். இதுவும் இக்கால சேரனின் வாகனம் தானே…) நம் பள்ளிப்பருவத்திற்கு சென்றால், அங்கு வட்டம் என்று சிம்பிளான விஷயம் வடிவியலில் (geometry) படித்தது நினைவில் வரும். அதை தூசி தட்டும் இக்கால ஆராய்ச்சி விஷயம்தான் உருளைக்கிழங்கு வறுவல் வடிவியல். ஈக்குவேஷன்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

எல் கிரக்கோ விடுகதை    
January 25, 2009, 12:30 am | தலைப்புப் பக்கம்

அழகும் அறிவும் பற்றி அருள் பேசிக்கொண்டிருக்கார். சார்ந்ததாக அறிவியல் சிந்தை என்றால் என்ன என்பதை சுவையாக விளக்கும் ஒரு தோற்ற மாயையை இப்பதிவில் தருகிறேன். எல் கிரக்கோ (El Greco) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய ரினைஸன்ஸ் காலத்து ஓவியர். இவர் வரைந்த கடைசி கால ஓவியங்களில் ஆண்கள், பெண்கள், குழத்தைகள், தேவதைகள் என்று பாரபட்சமின்றி அனைவரும், நீண்டு உழைக்கும் சுடர்மணி பனியன் போல,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

மேகத்தின் கனம் என்ன    
January 23, 2009, 5:10 am | தலைப்புப் பக்கம்

காளிதாசரின் மேகதூதத்திலிருந்து முன்னொருகாலத்தில் காதலர்கள் தூதுவிட மேகத்தை உபயோகித்தாக தெரிகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இதே மேகம் காதலர்களால் பட்டபாட்டில் முத்துசாமி தீக்ஷதர் வர்ஷய வர்ஷய வர்ஷய என்று பாடியதும் கதறிக் கொண்டு மழையை பொழிந்ததாம், கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்காலங்களில் மேகத்திற்கும் நமக்கும் உறவுமுறை அவ்வளவு சுகிர்தமாக இல்லை. பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வெப்ப சலனம்    
January 22, 2009, 2:30 am | தலைப்புப் பக்கம்

பத்ரி முந்தைய பதிவில் குறிப்பிடும் வெப்ப சலனம் (convection)  பற்றி சற்றே பெரிய சிறுகட்டுரை. சூடான காற்று மேலெழும்பும். அனுபவித்திருக்கிறோம். ஒரு பாத்திரத்தில் தேமேனென்று சும்மா இருக்கிற தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமாக (கவனிக்க: மிதமாக) சூடுபடுத்தும் பொழுது தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம் (வீட்டில் சமயலறைவரை சென்றிருந்தால்)....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வெளிமண்டலத்தில் காப்பி குடிப்பது எப்படி?    
January 21, 2009, 1:56 pm | தலைப்புப் பக்கம்

முதல் டிகாக்‌ஷனில் இறக்கி காய்ச்சிய பாலில் (அம்மா) கலந்த டிகிரி காப்பியை வீட்டில் தூக்க கலக்கத்துடன் பேப்பர் படித்துக்கொண்டே உறிஞ்சி குடிக்கையில் யோசித்திருக்கலாம். சந்திரயான் வெற்றிக்கு பிறகு இந்தியர்களை விரைவில் நிலவிலும் செவ்வாயிலும் அனுப்பமுடியும் என்று கூறுகிறார்களே. அங்கு சென்றால் நம் சிவசாமி இந்த காப்பியை எப்படி குடிப்பார் என்று. குடிப்பது சற்று கடினம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்