மாற்று! » பதிவர்கள்

அமுதா

என்னத்த சொல்ல?    
July 14, 2010, 9:17 am | தலைப்புப் பக்கம்

குட்டிப் பெண்ணுக்கு திடீரென 2012 பயம். “அம்மா காலண்டர்-ல தேதி தீர்ந்துட்டால் உலகம் அழிஞ்சுடும். நாமெல்லாம் செத்துடுவோம்” என்று ஒரே அழுகை. வேறு காலண்டர் வாங்கலாம். எங்க பாட்டி, பாட்டிக்கு பாட்டி எல்லாம் வாழ்ந்த உலகத்தில், நீ பாட்டியாகி வாழ்வாய் என்றெல்லாம் கூறி சமாதானம் செய்ய முயன்றேன். ம்ஹூம் ... திடீரென சற்றே யோசித்து, “செத்து போனால் மேலேயா போவோம்” என்றாள். “ஆமாம்”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கற்றுக்கொண்டேன் கற்றுக்கொண்டேன்...    
June 14, 2010, 5:33 pm | தலைப்புப் பக்கம்

"அம்மா, நாளைக்கு டிக்டேஷன். சொல்லிக் கொடும்மா", என்று குட்டிப்பெண் சொன்னவுடன், பொறுமையாக புரிதலுடன் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பெருமையாக ஆரம்பித்தேன்.முதலில் ஒரு முறை வார்த்தைகளைப் படித்தோம். இனி மனப்பாடம் ஆகிவிட்டதா என பார்க்க வேண்டும். "lip" சொல்லு என்றேன். C,A,R என்று பதில் வந்தது. "இல்லடா, lip "ல்" எது மாதிரி சத்தம் வருது?" "ல...L" என்றாள்"வெரி குட். இப்ப lip "ப்" எப்படி முடியற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இறைவனுக்கு நன்றி    
August 4, 2009, 4:28 pm | தலைப்புப் பக்கம்

கண்ணாடி நொறுங்கி முகமிழந்து நின்ற காரைச் சலனமின்றி பார்த்தேன். எனக்கே என் குணம் வியப்பாக இருந்தது. முதன்முதலில் கார் எங்கள் வீட்டுக்கு வந்தது நினைவில் நிழலாடியது. காரை என் கணவர் வீட்டு வாசலில் நிறுத்த முயன்ற பொழுது சுவரில் பட்டு சிறு கீறல் விழுந்தது. அதற்கு நான் செய்த ஆர்ப்பாட்டத்தில் சில நாட்களுக்கு என் தம்பி காரைத் தொடவே இல்லை. என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என் வழி தனிவழி    
February 19, 2009, 10:12 am | தலைப்புப் பக்கம்

"உன் பெயர் என்ன", இது நந்தினியின் 4 வயதில் பலராலும் அவளின் மழலைக்காகக் கேட்கப்படும் கேள்வி. "நந்தினி என்ற சுதந்திரா என்ற லஷ்மி தேவி என்ற ஏஞ்சல் என்ற..." என்று கிட்ட தட்ட ஒரு நிமிடத்துகு நீளும் பதிலில் "நந்தினி" தவிர ஒன்றும் புரியாது. இதில் ""நந்தினி என்ற சுதந்திரா" மட்டுமே நாங்கள் வைத்தது, மீதி அவள் பிடித்து வைத்துக்கொண்டது. இப்பொழுது யாழினியிடம் உனக்கு இன்னொரு பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வறியார்க்கொன்று ஈவதே..    
December 18, 2008, 8:23 am | தலைப்புப் பக்கம்

முகம் இறுக, உள்ளே மனம் உருக நகர வேண்டிய கட்டாயங்கள் பல நேரம் வந்ததுண்டு. பெரும்பாலும், சிக்னலில் பச்சைக் குழந்தையுடனோ, பச்சிளம் பாலகர்களோ கையேந்தும் பொழுது தான் பெரும்பாலும் இந்நிலை. ஒன்றிரண்டு ரூபாய் கொடுப்பதால் ஒன்றும் குறையாது... ஆனால், இவர்கள் ஒரு கும்பலாகச் செயல்படுகிறார்கள், இதற்கென குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள் என கேள்விப்படும் பொழுது, சொல்ல முடிய வருத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அழகான வேஷதாரியே...    
December 16, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

பூக்களுக்கு மேக்கப் போடணுமா, அதன் அழகை ரசிக்க? குழந்தைகளுக்கு வேஷம் போடணுமா அவர்களை ரசிக்க? என்றாலும், இந்த சுட்டீஸ் வேஷம் போட்டாலும் போடாவிட்டாலும் அழகு தான். நந்தினி ப்ரீ-கேஜி போகும்பொழுது , நல்லா குறள் சொல்லுவானு, திருவள்ளுவர் வேஷம் போட கூட்டிட்டு போனால், சேலை கட்டி அம்மனாகணும்னு அடம். அம்மனுக்கு ஒரே கிராக்கி, கிடைக்கலை. அப்புறம் அவங்க கிருஷ்ணரா தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு கொடியில் இரு மலர்கள்    
December 16, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

அமித்து அம்மாவோட பதிவைப் பார்த்த உடனே இது பத்தி எழுதணும்னு நினைச்சேன்.. எழுதிட்டேன்... அதாங்க இரண்டு குழந்தைகள் என்றால் பெற்றோர் உணர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள்...1. தயார்ப்படுத்துதல்இரண்டாவது குழந்தைக்கு நீங்களும் தயாராகி உங்கள் குழந்தையையும் தயார்படுத்த வேண்டும். இன்னொரு குழந்தை வந்தால் உங்கள் அன்பு மேலும் பகிரப்பட்டு சில நாட்களுக்கு கொஞ்சம் அழுத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வண்ண வண்ண பொம்மைதான்...    
December 15, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்

குட்டிப் பெண்ணுக்கு இப்பொழுது விவரம் தெரிவதால், பல விஷயங்களை நான் காரணத்தோடு மறுக்கிறேன். பொம்மை (பார்பி ரொம்ப காஸ்ட்லி, வேண்டாம்), டி.வி (முதலில் ஸ்கூலுக்கு ரெடியான பின் என்பது இப்பொழுது ஸ்கூல் விட்டு வந்த பின்) என்று விதிமுறைகள் போட்டாச்சு. முதலில் பயங்கர எதிர்ப்பு (முன்பெல்லாம் அழுகையை நிறுத்த முடியாது) கிளம்பினாலும், நான் அசைந்து கொடுக்காததால், மேடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வளரும் பெண் இவள்...    
December 11, 2008, 4:02 am | தலைப்புப் பக்கம்

ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்ல புது காரணம் வேணுமா என்ன? வயிறு வலிக்குது, வேன் கூட்டமா இருக்கு, பரத் அடிக்கிறான், மஞ்சரி என் பக்கத்தில் உட்காரலை, மோனிஷா என் கண்ணைக் குத்தறாள், தூக்கம் வருது, டயர்டா இருக்கு, தலை வலிக்குது ... மேலும் , மேலும்....அப்படி இப்படினு பேசிப் பார்த்தால் தான் நிஜ காரணம் வரும்.ஒரு காரணம், மேடம் வந்தவுடன் என் பெற்றோர் சற்று தொலைவில் உள்ள தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுகதை    
December 9, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

என் குட்டிப் பொண்ணுங்களுக்கு விடுகதை ரொம்ப பிடிக்குது. சின்ன வயசில அடிக்கடி கூறிய விடுகதைகளைச் சொல்ல, திரும்ப திரும்ப கூறினாலும் அலுக்காமல் இரசிக்கிறார்கள். சில நினைவில் நின்ற விடுகதைகள் இங்கே. வேறு இந்த மாதிரி எளிய விடுகதைகள் இருந்தால் சொல்லுங்கள், என் பெண்களுக்குச் சொல்ல உதவும்.1. ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை (என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

குழலினிது யாழினிது    
December 8, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

குட்டிப் பெண்ணுக்கு ஒரு வாரம் கழிச்சு ஸ்கூல். எல்லாம் நிஷா புயலின் உபயம். மேடமுக்கு பள்ளி செல்ல மனமில்லை. நான் வீட்டில் இருப்பேன் என்ற உறுதி மொழி வாங்கி பள்ளிக்குச் சென்று வந்தாள். எனக்கு நெட் சதி செய்ததால் வேலை செய்வது சிரமமாக இருந்தது. அவளிடம் அனுமதி பெற்று அலுவலகம் செல்லலாம் என்றிருந்தேன்"குட்டிம்மா, நான் ஆபீஸ் போய்ட்டு சாயங்காலம் வந்துடறேன்.""முடியாது, எனக்கு நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஓடி விளையாடு பாப்பா    
December 8, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

"ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பாகூடி விளையாடு பாப்பாஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா."என்பது மகாகவியின் பொன்னான வரிகள்.நாம் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகின்றனரா, தூங்குகின்றனரா, படிக்கின்றனரா என்று பார்க்கும் அளவுக்கு போதிய உடல் உழைப்பு இருக்கின்றதா என கவனிக்கிறோமா என்று ஒரு கேள்வி தோன்றியது. இதை நாம் அவசியம் கவனிக்க வேண்டும். முன்பு "வெயிலோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாட்டியின் நினைவுகள்    
December 5, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்

இன்று குழந்தைகளுக்கு சலிக்காமல் கதை கூறுகிறேன் என்றால் அது என் மாம்மையின் இன்ஸ்பிரேஷன் தான். அவர்கள் கூறியது என்னவோ நாலு கதைகள் தான் என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டாலும் திகட்டா இன்பம் உடைய கதைகள். "மாம்மை கதை சொல்லுங்க" என்றவுடன் "பிறந்த கதை சொல்லவா , வளர்ந்த கதை சொல்லவா" என்று ஆரம்பித்து சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் கதை கூறுவார்கள்.கடைசி வரை மண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீயின்றி....    
December 2, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

காதைக் கிழிக்கும் அமைதியுடன்காலை மலர்ந்தது...முத்தமில்லா கணங்கள்சத்தமின்றி ஊர்ந்தன...இறைக்கப் படாத பொருட்கள்கிழிக்கப் படாத காகிதங்கள்சிந்தப் படாத வண்ணங்கள்எனகளையிழந்து உள்ளது வீடுவிடுமுறை முடியும் முன்விரைந்து வா மகளே!!நீ வந்து உயிரூட்ட காத்துக்கிடக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கவிதை

ஆராரோ ஆரிராரோ...    
December 2, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்

குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... தாலாட்டு. நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... அதைக் கேட்டுத் துயிலும் உயிரைக் கண்டு மனம் நெகிழும். உண்மையில் "இது தூங்கும் நேரம்", என்று ஒரு பழக்கம் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது. என் தாய் "பூஞ்சிட்டு கன்னங்கள்..." என்று பாட ஆரம்பித்ததில் நான் மிகவும் கவரப்பட்டு, அதன் பிறகு பல பாடல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஏன் கொடுத்தாய் ஆறறிவு?    
November 28, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

இறைவா!ஏன் கொடுத்தாய் ஆறறிவு?இல்லாதிருந்தால்..தற்காப்புக்காக மட்டுமேதலைகள் விழுந்திருக்கும்.இன்றோ....இனமென்றும், மதமென்றும், மொழியென்றும்மண்ணென்றும், பொன்னென்றும், போதையென்றும்,மனமென்றும், மனச்சிதைவென்றும்...நித்தம் ஒரு காரணமென்று எண்ணற்ற காரணங்கள்எண்ணற்ற தலைகள்.. ஆறறிவு என்பதுஅன்பால் உலகை உய்விக்கஅமைதி பூமி உருவாக்கஎன்று அனைவரும்உணர்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

அது ஒரு மழைக்காலம்    
November 25, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

மழை வருது மழை வருதுநெல்லு குத்துங்கமுக்கா படி அரிசி போட்டுமுறுக்கு சுடுங்கதேடி வந்த மாப்பிள்ளைக்குஎண்ணி வைங்கதேடாத மாப்பிள்ளைக்குசூடு போடுங்க...முறுக்கைக் கொறித்தபடி, பாடல் பாடி, கையில் கிடைத்த காகிதமெல்லாம் படகாக மாறிய மழைக்கால நினைவுகள் மனதை நனைக்கின்றது. இன்று, என்னருகே என் பெண்கள் "மழையே மழையே சீக்கிரம் போயிடு..." என்று டோராவைப் பாடுகிறார்கள். சமீபத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தாய்மை என்றோர் உணர்வு...    
November 21, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

அவள் அந்த குட்டிக் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். "அம்மாவும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த முற்றத்தில் பாம்பு புகுந்திருந்தது. தாயை எழுப்ப எல்லோரும் சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். ம்ஹீம்... அவள் அசைவதாகத் தெரியவில்லை. நல்ல அசதி போல். சற்றுத் தொலைவில் இருந்து கம்பால் தொட்டுப் பார்த்தார்கள். அசைந்தாள் , ஆனால் எழவில்லை. ஒரு பெண், மல்லிகைப் பூவை எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பூனைக்கு மணி கட்டுவது யாரோ?    
November 20, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்

என் பெண் வகுப்பில் ஒரு பெண் கொஞ்சம் தகராறு செய்வாள். அவளைப் பற்றி ஏதேனும் இவள் கூறிக் கொண்டிருப்பாள். பிரிவதும் சேர்வதும் தானே குழந்தைகள்? பொதுவாக இவள் மனதை மிகவும் பாதிக்காத விஷயம் நடக்கும் வரை நான் இவள் கூறுவதை கேட்பதோடு நிறுத்திக் கொள்வேன். அவள் ஏதேனும் நல்ல முறையில் கையாண்டிருந்தால், என் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வேன். அன்று என்னிடம், தனது ஆசிரியை ஒருவர் என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இன்று என்பது பரிசு    
November 19, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

ம்ம்... என் பெண் வளர்கிறாள் என்று பல விஷயங்களில் தெரிகிறது. அப்படி ஒண்ணு தான், நமக்கு கிடைக்கும் அறிவுரைகள். உண்மையில் இந்த வயதில் (10) இவ்வளவு யோசிக்கிறார்களே என்று ஆச்சரியமாக உள்ளது. அன்று, இரவு நேரங்கழித்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தோம். பல இடங்களில் கல்லூரி படிக்கும் வயது பெண்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது.நான்: ம்.. நீ பெரியவள் ஆனால் எப்படி இருக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இனிதாகத் தொடங்கட்டும் காலை...    
November 13, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகளைக் காலையில் எழுப்பி ஸ்கூலுக்கு கிளப்புவது ஒரு பெரிய வேலை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தான் விடியும். குழந்தைகளைப் பொறுத்தும் உள்ளது. சின்னவள் காது பட "என் பொண்ணு தங்கம், அம்மா கேட்கறதுக்கு முன்னாடி பல் தேச்சுட்டு பால் எங்கேனு கேட்பாள்" என்றால் போதும், அடுத்த நிமிடம் சொன்னது நடக்கும். பெரியவளுக்கு இதெல்லாம் "ஜுஜுபி". எவ்ளோ பார்த்திருக்கிறோம் நாங்க என்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: